உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாலிபரை அடித்து கொலை செய்த தாய், சகோதரன், சகோதரி கைது

வாலிபரை அடித்து கொலை செய்த தாய், சகோதரன், சகோதரி கைது

மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே வாலிபரைஅடித்து கொலை செய்து நாடகமாடிய தாய், சகோதரன், சகோதரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.பீர்மேடு அருகே பள்ளிகுன்னு தனியார் தேயிலை எஸ்டேட்டைச் சேர்ந்த பாபு- பிரேமா 50, தம்பதி மகன் பிபின் 29. கோவையில் டிரைவராக வேலை செய்தவர், தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். அப்பகுதியில் வசிக்கும் சகோதரி பினிதா 26, மகனுக்கு நவ.,5 நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிபின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.போதையில் இருந்த பிபின், சகோதரியின் ஆண் நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டு தாய் பிரேமாவை தாக்கினார். அதனை கவனித்த சகோதரன் பினோத் 25, பினிதா ஆகியோர் பிபினை பலமாக தாக்கினர். மயக்கமுற்ற பிபினை தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் வீட்டின் அருகில் உள்ள கழிப்பறையில் பிபின் தூக்கிட்டுக் கொண்டதாகவும் அவர்கள் டாக்டர்களிடம் கூறினர். பிபினை பரிசோதித்த டாக்டர்கள் இறந்ததாக தெரிவித்தனர்.பிரேத பரிசோதனையில் பிபின் கொலையானது தெரியவந்தது. டி.எஸ்.பி., விஷால்ஜான்சன், இன்ஸ்பெக்டர் கோபிசந்த் ஆகியோர் தலைமையில் போலீசார் பிபின் குடும்பத்தினரிடம் விசாரித்த போது அவரை அடித்து கொலை செய்தது தெரிந்தது. பிரேமா, பினோத், பினிதாவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை