பாலியல் கொடுமையால் ஆத்திரம் மருமகனை கொன்ற மாமியார்
நிர்மல்: தெ லுங்கானாவில், பாலியல் பலாத்காரம் செ ய்ய முயன்ற மருமகனை , கட்டையால் அடித்துக் கொன்ற மாமியாரை போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிராவின் ஹிமாயத் நகரைச் சேர்ந்தவர் ஷேக் நசீம், 45. இவர், 10 ஆண்டுகளுக்கு முன் மனைவி, மகன் மற்றும் மாமியாருடன் தெலுங்கானா வந்தார். இங்கு, நிர்மல் மாவட்டத்தில் உள்ள தரோடா கிராமத்தில் மூவரும் வசித்து வந்தனர். கூலி வேலைக்கு சென்று வந்த ஷேக் நசீம், குடி பழக்கத்துக்கு அடிமையானார். சமீபத்தில், இவரின் மனைவி மற்றும் மகன் மஹாராஷ்டிராவின் ஷிவானி சென்றனர். இந்நிலையில், கடந்த வாரம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஷேக், துாங்கிக் கொண்டிருந்த 60 வயது மாமியாரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாமியார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஷேக் நசீம், மாமியாரிடம் மீண்டும் அத்துமீற முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த மாமியார், அருகில் இருந்த கட்டையை எடுத்து, ஷேக் நசீமை சரமாரியாக தாக்கினார். இதில், தலையில் காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இதைத் தொடர்ந்து மாமியாரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.