மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
1 hour(s) ago
பெங்களூரு: “பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹாவின் சகோதரர், மரம் வெட்டியதற்கு என்ன ஆதாரம் உள்ளது?” என, ம.ஜ.த.,வின் குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.பெங்களூரு ம.ஜ.த., அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் குமாரசாமி அளித்த பேட்டி:அயோத்தி ராமர் கோவில் திறப்பை, உலகமே எதிர்பார்த்து கொண்டு உள்ளது. இந்த நேரத்தில் ஹிந்து ஆர்வலர் ஸ்ரீகாந்த் பூஜாரியை கைது செய்து, காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. மாநிலத்தில் பல பிரச்னைகள் உள்ளன.விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். இதை பற்றி அரசு கவலைப்படவில்லை. ஹிந்து அமைப்பு தொண்டர்களை அரசு ஒடுக்குகிறது.ஹிந்து அமைப்பினர் பொய் வழக்குகளில் கைது செய்யப்படுகின்றனர். இதை முதல்வரும், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரும் நியாயப்படுத்துகின்றனர். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போல, மீண்டும் நடக்க வாய்ப்பு இருப்பதாக, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் கூறியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.எம்.பி., பிரதாப் சிம்ஹாவின் சகோதரர் விக்ரம் சிம்ஹாவை, மரம் வெட்டிய வழக்கில் கைது செய்தனர். அதற்கு என்ன ஆதாரம்? இந்த வழக்கில் வனத்துறை அதிகாரிகளை அடிக்கடி அழைத்து, சித்தராமையா பேசி உள்ளார். அவரது தொலைபேசி அழைப்புகளை எடுத்தால், உண்மை தெரியும்.மாண்டியாவில் காங்கிரஸ் எம்.எல்.சி., ஒருவர் மரத்தை வெட்டினார். அவர் மீது நடவடிக்கை இல்லை. இந்த வழக்கில் நான்கு வனத்துறை அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். அவரை பழிவாங்கி உள்ளனர். மாநிலத்தில் பல இடங்களில் நிலவும், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.இவ்வாறு அவர்கூறினார்.
1 hour(s) ago