மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7
பெங்களூரு: கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையில், பழுதாகி உள்ள எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம், கடந்த 15 நாட்களாக வேலை செய்யவில்லை. இதனால் அதிக பணம் கொடுத்து, ஸ்கேன் எடுக்கும் நிலைக்கு, நோயாளிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.பெங்களூரு லக்கசந்திரா ஹொம்பேகவுடா நகரில், கித்வாய் புற்றுநோய் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மாநிலத்தின் பிற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களை சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு, மருத்துவமனையில் உள்ள எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் பழுதாகி உள்ளது.ஆனால் அதை சரிசெய்ய, மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஸ்கேன் எடுக்க முடியாமல், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.தனியார் ஆய்வகங்களுக்கு சென்று, ஸ்கேன் எடுத்து வரும்படி, நோயாளிகளிடம், மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறி உள்ளனர். இதனால் 10,000 ரூபாய் வரை கொடுத்து, ஸ்கேன் எடுக்கும் நிலைக்கு, நோயாளிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து சிக்கமகளூரை சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், 'எனது குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கித்வாய் மருத்துவமனைக்கு சென்றால், தரமான சிகிச்சை கிடைக்கும் என்று, சிக்கமகளூரு அரசு மருத்துவமனை டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.'ஆனால் இங்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் வேலை செய்யவில்லை. வெளியே சென்று எடுத்து வர சொல்கின்றனர். இதற்கு 10,000 ரூபாய் கேட்கின்றனர். நாங்களே ஏழைகள். பணத்திற்கு எங்கு செல்வது. இதனால் வீட்டிற்கே திரும்ப செல்ல உள்ளோம்' என்றார்.இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் லோகேஷ் கூறுகையில், ''கடந்த 13 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருவதால், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் பழுதாகி உள்ளது. புதிய இயந்திரத்தை வாங்க, அரசின் அனுமதிக்காக காத்து உள்ளோம். கூடிய விரைவில் பிரச்னை முடிவுக்கு வரும்,'' என்றார்.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 7