உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முல்லைப் பெரியாறில் புதிய அணை: லோக்சபாவில் காங்., எம்.பி., குதர்க்க பேச்சு

முல்லைப் பெரியாறில் புதிய அணை: லோக்சபாவில் காங்., எம்.பி., குதர்க்க பேச்சு

புதுடில்லி: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., ஹிபி ஏடன் பேசியுள்ளார்.முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இதற்காக அணை பலவீனமாக உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது என அடிக்கடி சொல்லி வருகிறது. ஆனால், அணை பலமாக உள்ளதால், புதிய அணை தேவையில்லை என தமிழக அரசு திட்டவட்டமாக சொல்லி உள்ளது. நிபுணர்கள் ஆய்விலும் அணை பலமாக உள்ளது தெரியவந்துள்ளது.இந்நிலையில், லோக்சபாவில் எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஹிபி ஏடன் பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையால், அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர், கேரளாவிற்கு பாதுகாப்பு என்பதே எங்களின் குறிக்கோள் . இவ்வாறு அவர் பேசினார்.

திமுக பதில் என்ன

தமிழகத்தின் நலனுக்கு எதிராக கேரள காங்., எம்பி பேசுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுடன் காங்., கூட்டணி வைத்துள்ளது. இப்படி கூட்டணி கட்சி எம்பியே தமிழகத்திற்கு எதிராக பேசும்போது திமுகவின் நிலைப்பாடு என்ன என்று விமர்சனம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஆக 29, 2024 12:28

முல்லைப் பெரியாறு அணையின் தமிழகத்திற்கு 1000 வருட உரிமை உள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு அணை நீடிக்க போவதில்லை. இன்று இன்று இல்லாவிட்டால் நாளை நாள இல்லாவிட்டால் நாளை மறுநாள் என்றாவது ஒருநாள் புதிய அணை கட்ட தான் வேண்டும். அப்படி கட்டப்படும் பொழுது தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் எப்படி கையாள்வது என்று ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். எதிர்கால தலைமுறையினருக்கு தள்ளி போடுவது சரியான தீர்வாக இருக்காது


பல்லவி
ஆக 10, 2024 05:23

புதிய அணை கட்ட தளவாட சாமான்கள் தமிழகம் ஏற்கனவே விற்பனை செய்து விட்டது என்பது தமிழக கேரள எல்லையில் கடந்து செல்லும் ஆட்சியாளர்களின் வாகனங்கள் மூலம் அறியலாம் , கைப்புண்ணிற்கு கண்ணாடி எதற்கு


lana
ஆக 09, 2024 23:22

நமக்கு காசு பணம் துட்டு மணி இது தான் தேவை. இப்படிக்கு தீய முக


M Ramachandran
ஆக 09, 2024 20:03

வேறு என்ன தீ மு க்கா விற்கு லாலி பப். ஸ்டாலின் முக்கல் முனகல் ஒலி தான்


Shankar
ஆக 09, 2024 19:34

முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கண்டிப்பா கட்ட வேண்டும் வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தூறு போல கெடும் என்ன திருக்குறளை நினைத்து அவரவர் வருமுன் காத்துக் கொள்ள வேண்டும்.


theruvasagan
ஆக 09, 2024 19:29

அந்ந எம்.பி இதை பேசறப்ப அந்த நாப்பதும் எங்க போனாங்க. கேண்டீன்ல சமோசா டீ சாப்பிடவா.


Palanisamy T
ஆக 09, 2024 18:41

அணையின் பாதுகாப்பு மற்றும் சம்பந்தப் பட்ட ஆய்வுக் குழு நீதிமன்ற தீர்ப்பு இவற்றையெல்லாம் அறிந்துதான் பேசுகின்றீர்களா? அணையை கட்டியது பிரிட்டிஷ் ஆட்சியில்.ஆதலால் பாதுகாப்புப் பற்றி நீங்கள் கவலைக்கொள்ள வேண்டாம். ஒருவேளை சுதந்திர இந்தியா வில் கட்டப்ப்ட்டிருந்தால் நீங்கள் சொல் வதில் நியாயமுண்டு. ஏனென்றால் லஞ்சம் ஊழல் சுதந்திர இந்தியாவில் இன்றும் தலைவிரித்தாடுகின்றதே.


பேசும் தமிழன்
ஆக 09, 2024 18:21

கான் கிராஸ் கட்சி என்றாலே...... நாட்டுக்கு எதிரான ஆட்கள் தானே..... அவர்கள் என்றைக்கு மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து இருக்கிறார்கள் ??


D.Ambujavalli
ஆக 09, 2024 16:48

அடுத்து அந்தப்பக்கம் தாவி இதே காங்கிரஸ் சீட் வாங்கப் பார்க்கும் இந்தக் கூட்டணி ஆறாவது விரல்தான்


Duruvesan
ஆக 09, 2024 15:56

பாஸ் நமக்கு குடும்ப பிசினஸ் முக்கியம், டாஸ்மாக் அடிமைகள் காசு குடுத்தா மூடிட்டு ஓட்டு போடும்


A good
ஆக 09, 2024 17:52

நமக்கு தழிழ் நாட்டை பற்றி அக்கறை ஒன்றும் இல்லை.40 எம் பி க்கள் இருக்கிறார்கள் பிறகு என்ன.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை