உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு; 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 12 பேரை விடுவித்தது நீதிமன்றம்

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு; 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 12 பேரை விடுவித்தது நீதிமன்றம்

மும்பை: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 12 பேரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில், சம்பவம் நடந்து 19 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு அளித்த தண்டனையை ரத்து செய்துள்ளது.கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பையின் புறநகரில் உள்ள 7 ரயில்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 188 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பிரஷர் குக்கரில் வெடிகுண்டுகள் வைத்து வெடிக்கச் செய்தது தெரிய வந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8j5jrjd8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவ்வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். 9 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. 192 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் 12 பேர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்தது.கடந்த 2015ம் ஆண்டு, இதில் 5 பேருக்கு மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. இந்த தீர்ப்பிற்கு பிறகு, மஹா., அரசு குற்றவாளிகளின் மரண தண்டனை உறுதி செய்ய கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதே நேரத்தில், தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் இன்று (ஜூலை 21) 12 பேர் மீதான தண்டனையை ரத்து செய்து, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. ''அவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது'' என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். தீர்ப்பை கேட்ட குற்றவாளிகள் தங்களது வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். சம்பவம் நடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 12 பேரை நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஜூலை 22, 2025 20:30

என்ன நீதி மன்றங்களோ, என்ன தீர்ப்புக்களோ.


Iyer
ஜூலை 21, 2025 23:37

நமது HCs & SC உள்ள நீதிபதிகளின் வீட்டில் திடீரென RAID நடத்தி சோதனை செய்தால் - 90% நீதிபதிகளின் வீட்டில் யஸ்வந்த் வர்மாவின் வீட்டில் கிடைத்த பணத்தை விட பலமடங்கு அதிகம் பணம் சிக்குவது நிச்சயம். நமது அரசியல்வாதிகளை விட அதிக ஊழல்வாதிகளாக நமது நீதிபதிகள் ஆகிவிட்டார்கள்.


Sundaran
ஜூலை 21, 2025 20:06

இப்படியே குற்றவாளிகளை எல்லாம் விடுதலை செய்து விடுங்கள் நாடு உருப்படும் . தீர்ப்புகள் கேலி கூத்தாகி வருகின்றன. இனி எவனும் சட்டத்துக்கு பயப்பட மாட்டான். சாட்சி இல்லை என்று கூறி விடுதலை செய்கிறீர்களே. திருடன் சாட்சி வைத்து கொண்டா திருடுவான்.


என்றும் இந்தியன்
ஜூலை 21, 2025 16:56

அவர்கள் குண்டு வெடிப்பு நடத்தினார்கள் என்ற கூற்றுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுவிக்கின்றது நீதிமன்றம். இது எப்படி இருக்கின்றதென்றால் ஒருவனை குத்திக்கொன்றால் / குண்டு வைத்துக்கொன்றால் அடுத்த தீர்ப்பு இப்படி இருக்கும். அவன் அந்த குண்டை வீசியதினால் அல்லது கத்தி குத்தியதால் மரணம் அடைந்தது என்பது உண்மையே ஆனால் அவர்கள் மரணம் குண்டினால் / கத்தியால் நிகழ்ந்ததால் அந்த குண்டுக்கும் / கத்திக்கும் மரணதண்டனை கொடுக்கப்படுகின்றது.


Ragupathi
ஜூலை 21, 2025 16:36

இவர்கள் குற்றவாளிகள் இல்லையென்றால் உண்மையான குற்றவாளிகள் யார். போலீஸ் ஏன் எங்கு கோட்டைவிட்டது. திறமையான


shakti
ஜூலை 21, 2025 15:27

அந்த நீதிபேதி வீட்டில் அடுத்து தீவிபத்து நடக்கும்போது இந்த தீர்ப்பின் ரகசியம் வெளிவரும்


Iniyan
ஜூலை 21, 2025 12:51

தேச விரோதிகள்.


Kanns
ஜூலை 21, 2025 12:35

Prosecute& Punish, All Conspiring Criminals Police Prosecutors Judges for Failure of Punishing Real& Dreaded Criminals


Krishnamurthy Venkatesan
ஜூலை 21, 2025 12:06

குற்றம் புரிந்தவர்கள் யார்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை