உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூணாறில் சட்டென மாறிய காலநிலை 6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

மூணாறில் சட்டென மாறிய காலநிலை 6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

மூணாறு: மூணாறில் கால நிலை சட்டென மாறிய நிலையில் நேற்று காலை வெப்பம் 6 டிகிரி செல்சியஸ் பதிவானது. மூணாறில் அக்.29 வரை மழை தொடர்ந்த நிலையில், அதன்பிறகு காலநிலை சட்டென மாறியது. அக்.30ல் காலையில் வெப்பம் 13 டிகிரி பதிவான நிலையில், நேற்று முன்தினம் 8 டிகிரி செல்சியசாக குறைந்தது. அது நேற்று காலை 6 டிகிரி செல்சியஸ்சாக குறைந்து குளிர் நிலவியது. இரண்டு நாட்களாக வெயில் சுட்டெரித்தது. பொதுவாக நவம்பரில் குளிர் காலம் துவங்கினாலும், மாதம் முழுவதும் காலையில் வெப்பம் 15 டிகிரி செல்சியஸ் வரை நிலவும். டிசம்பரில் வெப்பம் படிப்படியாக குறைந்து மாத இறுதியில் மைனஸ் வரை எட்டும். கடந்தாண்டு டிச. 11, 12 ஆகிய நாட்களில் காலையில் வெப்பம் 9 டிகிரி செல்சியஸ் நிலவிய நிலையில், டிச.24ல் வெப்பம் 2 டிகிரி செல்சியசாக குறைந்து பல பகுதிகளில் உறைபனி ஏற்பட்டது. இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக முன் கூட்டியே நவ.1ல் வெப்பம் 6 டிகிரி செல்சியஸ் நிலவியது. இதே கால அளவில் கடந்தாண்டு வெப்பம் 15 டிகிரி செல்சியஸ் பதிவானது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !