உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூணாறில் 3வது முறை உறைபனி

மூணாறில் 3வது முறை உறைபனி

மூணாறு : மூணாறில் வழக்கத்துக்கு மாறாக 33 நாட்கள் இடைவெளியில் நேற்று மூன்றாம் முறையாக உறைபனி ஏற்பட்டது.மூணாறில் ஆண்டு தோறும் குளிர்காலம் நவம்பரில் துவங்கி பிப்ரவரி வரை நீடிக்கும். இந்தாண்டு 'பெஞ்சல்' புயல் உள்பட பல்வேறு காரணங்களால் குளிர் போக்கு காட்டியது. டிச.,24 காலை குறைந்தபட்ச வெப்பம் 2 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து பல பகுதிகளில் உறைபனி ஏற்பட்டது. அதன்பிறகு பத்து நாட்கள் இடைவெளியில் ஜன., 4ல் மூணாறு அருகே செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் காலை வெப்பம் ' ஜீரோ' டிகிரி செல்சியஸ் குறைந்து உறைபனி ஏற்பட்ட நிலையில் ஜன.,5 பல பகுதிகளில் உறைபனி தொடர்ந்தது.

மீண்டும் உறைபனி:

இந்நிலையில் நேற்று காலை வெப்பம் வெகுவாக குறைந்து குளிர் வாட்டியது. பல பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பம் 'ஜீரோ' டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. செண்டுவாரை, லட்சுமி எஸ்டேட் பகுதிகளில் ' ஜீரோ', நல்ல தண்ணி, சிவன்மலை, தேவிகுளம் எஸ்டேட் பகுதிகளில் ஒன்று, சைலண்ட்வாலி எஸ்டேட்டில் 2 டிகிரி செல்சியஸ் பதிவானது. அதனால் அப்பகுதிகள் மற்றும் கன்னிமலை, பெரியவாரை எஸ்டேட் பகுதிகளில் உறைபனி ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !