உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு ரத்து: முருகனுக்கு திடீர் நிம்மதி

முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு ரத்து: முருகனுக்கு திடீர் நிம்மதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : மத்திய அமைச்சர் முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தாக்கல் செய்திருந்த அவதுாறு வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முருகன், கடந்த 2020ல் அளித்த பேட்டியில், 'முரசொலி அறக்கட்டளையின் சென்னை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது' என்று கூறியிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக, முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ-.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்த மனு, கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முருகன் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் யாரையும் அவதுாறு செய்யும் எண்ணம் இல்லை என முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முருகன் தரப்பு வாதத்தை ஏற்றும், அதன் அடிப்படையில், அவதுாறு வழக்கைத் தொடரப்போவதில்லை என்று முரசொலி அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டதையும் அமர்வு குறிப்பிட்டது.இதையடுத்து, அவதுாறு வழக்கை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாக அமர்வு குறிப்பிட்டது. மேலும், சென்னை நீதிமன்றத்தில் உள்ள முருகனுக்கு எதிரான அவதுாறு வழக்கை ரத்து செய்தும், உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

RAAJ68
டிச 06, 2024 16:09

மோடியைப் பற்றியும் அமித்ஷாவை பற்றியும் தரக்குறைவாக விமர்சனம் செய்யும் திருமாவளவன் மீது உங்கள் பாஜகனார் ஏன் வழக்குப் பதியவில்லை.


ஆரூர் ரங்
டிச 06, 2024 11:59

மூலப்பத்திரம் காண்பிக்காத பத்திரிக்கை அலுவலகம் வீராணம் திட்ட ஒப்பந்ததாரரிடம் கட்டி வாங்கியது என சரக்காரியா கமிஷன் அறிக்கையில் வெளியானது . இதுதான் விஞ்ஞான வழி. சாதாரண பின்புலத்திலிருந்து வந்த முருகன் மோதுவதற்கு முன் பலமுறை சிந்தித்திருக்க வேண்டும்


Ramalingam Shanmugam
டிச 06, 2024 11:16

பஞ்சமி நிலம் இல்லை என்று முருகன் ஒப்பு கொண்டாரா வெட்கம்


Sidharth
டிச 06, 2024 10:58

சார்வர்க்கரின் கொள்கை வாரிசு என்று நிரூபித்து விட்டீர் ஐயா


Barakat Ali
டிச 06, 2024 10:00

பாஜக மீது அவதூறு பரப்பிவரும் ஆர் எஸ் பி மீடியாக்கள் மீது தனது பதவியைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப் பட்டது ... பிறகு பயந்தாங்கொள்ளி என்று தெரிந்தது ... அடிச்சு கிடத்துவாரு என்று எதிர்பார்க்கப்பட்டவர் குத்து வாங்கிக்கொண்டு ஒருக்களித்துவிட்டார் ....


பாமரன்
டிச 06, 2024 10:11

கேட்டாத்தானே... இப்போவாவது புரிஞ்சா சரி


S Regurathi Pandian
டிச 06, 2024 09:37

முரசொலி மீது அவதூறு பரப்பும் எண்ணமில்லை என்று பாஜக அமைச்சர் முருகன் சொன்னாராம் அந்த வாதத்தை ஏற்று வழக்கை தொடரப்போவதில்லை என்று திமுகவின் முரசொலி அறக்கட்டளை சொன்னதால் உய்ரநீதிமன்ற தீர்ப்பு ரத்து. அடடா


ஆரூர் ரங்
டிச 06, 2024 09:15

ஆனா இன்னி வரைக்கும் மூலப்பத்திரத்தை காண்பிக்கவில்லை..ஆக தில்லாலங்கடி. முன்னேற்றக்கழகத்தைத் துவக்கிய ஐவரில் இல்லாத கருணா கட்சியையே கைப்பற்றி குடும்ப கார்பரேட் ஆக்கிவிட்டார். மற்ற தலைவர்கள் நடத்திய பத்திரிக்கைகளைக்கூட காணோம்.


வைகுண்டேஸ்வரன்
டிச 06, 2024 10:49

மோடி அரசில் எல்லாரும் பெரிய அறிவாளிகள் என்று பீத்திக்கறாங்களே சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கறது தானே?? எங்கே?


கனோஜ் ஆங்ரே
டிச 06, 2024 11:28

ஒரு தனிநபர் சொத்து விவரத்தை குறிப்பா, மூல பத்திரத்தை பொதுவெளியில் வெளியிடக் கோரி கேக்குறியே மொதல்ல உன் வீட்டு மூல பத்திரத்தை பொதுவெளியில் காட்டு... அப்புறம் முரசொலி மூலபத்திரத்தை காண்பிக்கச் சொல்லலாம்? உங்க கட்சியைச் சேர்ந்த பாஜக முருகன் அவர்களே.. பின்வாங்கிட்டார்... நீ என்ன கொசுறா...? இல்ல...?


RAAJ68
டிச 06, 2024 09:13

நீங்கள் போட மாட்டீர்கள் குறைந்தது பிஜேபியில் உள்ள பிராமணர்கள் அதாவது பெரிய தலைவர்கள் எச் ராஜா அஸ்வத் தாமுன் பேராசிரியர் நாராயணன் போன்றவர்கள் காதில் எதுவும் விழுவதில்லை அவர்கள் செய்திகளை படிப்பதில்லை. நமது நாட்டின் பிரதம மந்திரியை கீழ்த்தரமாக விமர்சனம் செய்கிறார்கள் நிர்மலா சீதாராமன் போன்ற பெரிய பதவியில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள்.


Narayanan Muthu
டிச 06, 2024 08:57

மூலம் வந்தவனுங்க மாதிரி மூலபத்திரம் வேணும்னு குதிச்சிவானுங்க எல்லாம் எங்கேயோ ஓடி ஒளிஞ்சுட்டானுங்க போல.


பாமரன்
டிச 06, 2024 08:39

ஸார் டூர் போயிருந்த நேரத்தில் கொஞ்ச நாள் எல் போர்ட் மார்கெட்டிங் இருந்தது. அப்பாலிக்கா இப்படி கழட்டி விட்டுட்டாளேன்னு நினைச்சேன்... இதோ ஒரு சான்ஸ் நாமெல்லாம் குஷியாக... எஞ்சாய் மக்கா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை