உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 லட்சம் பேர் பாடிய கந்த சஷ்டி கவசம்; மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பரவசம்!

5 லட்சம் பேர் பாடிய கந்த சஷ்டி கவசம்; மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பரவசம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டின் நிறைவாக, 5 லட்சம் பக்தர்கள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடி, பரவசம் ஏற்படுத்தினர். மாநாட்டில் பேசிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், ''முருகனைப்பற்றி இழிவாக யாரேனும் பேசினால் உங்கள் இதயம் நொறுங்க வேண்டாமா, பதற வேண்டாமா, துடிக்க வேண்டாமா,''' என்று ஆவேசமாக பேசினார்.https://www.youtube.com/embed/3ZRCaxsiRXI

மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் 'குன்றம் காக்க.. கோயிலை காக்க...' எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு இன்று (ஜூன் 22) மதியம் 3:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. ஆதீனங்கள், முக்கிய தலைவர்கள் பேசினர். 8 லட்சம் சதுர அடி பரப்பு மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இதில் 6 அடி உயரத்தில் சிறிய மேடையும், அதன் பின் 10 அடி உயரத்தில் பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் மையத்தில் முருகன் வேலுடன் நிற்பது போன்ற பதாகையும், அதன் பின் கோவில் கோபுரமும், குன்றமும் இருக்கும் படி அமைக்கப்பட்டு இருந்தன.Gallery

கந்தசஷ்டி கவசம்

மாநாட்டில், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், மடாதிபதிகள், ஹிந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ, செல்லுார் ராஜூ ஆகியோரும் பங்கேற்றனர். மைதானம் முழுவதும் முருக பக்தர்கள் குவிந்துள்ளனர். அமைச்சருக்கு சவால்மாநாட்டில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வரவேற்றுப் பேசினார். அவர் பேசுகையில், ''முருக பக்தர்கள் மாநாட்டிற்கு விளம்பரத்தைத் தேடிக் கொடுத்த திருமாவளவன், அமைச்சர் சேகர் பாபுக்கு எனது பாராட்டுக்கள். நாங்கள் நடத்தும் மாநாட்டிற்கு கணக்குக் காட்ட தயார்; கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பணம் எந்த தொழிலதிபர்களிடமிருந்து பெற்றது, அதில் எவ்வளவு ஊழல் நடந்தது என வெளியிட அமைச்சர் சேகர்பாபு தயாரா,'' என்று கேள்வி எழுப்பினார். கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், ஆசியுரை வழங்கினார். பவன் கல்யாண் கேள்விதொடர்ந்து பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். மாநாட்டில் பேசிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், ''முருகனைப்பற்றி இழிவாக யாரேனும் பேசினால் உங்கள் இதயம் நொறுங்க வேண்டாமா, பதற வேண்டாமா, துடிக்க வேண்டாமா,''' என்று ஆவேசமாக பேசினார்.மாநாட்டின் நிறைவாக, பங்கேற்ற 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடினர். எங்கும் இதுவரை நடந்திராத வகையில், ஒரே நேரத்தில் முருகனை நினைத்து லட்சக்கணக்கான பேர் கந்த சஷ்டி கவசம் பாடியது, பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது.மாநாட்டின் தீர்மானங்கள்திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்; கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றுவோம்பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நிகழ்த்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாராட்டுசென்னிமலை, திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட முருகனின் குன்றுகளை பாதுகாக்க வேண்டும் கோவில்களை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்ஹிந்துக்கள் ஒன்றுபட்டு இனி வரும் தேர்தல்களில் ஹிந்து ஓட்டு வங்கியை நிருபிக்க வேண்டும்மாதந்தோறும் சஷ்டியன்று கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டும்தினமலர் இணையத்தில் நேரலை!முருக பக்தர்கள் மாநாட்டை நேரலையில், காண இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

J.Isaac
ஜூன் 23, 2025 18:53

முருகன் சொன்னதை சொல்லுங்கள்


Guru
ஜூன் 23, 2025 21:21

ஏய் அல்லேலூயா கூட்டம் வாய மூடிக்கொண்டு இரு


muth
ஜூன் 26, 2025 21:01

உமக்கு தமிழ் தெரியாது...


Sankaran M
ஜூன் 23, 2025 18:30

முருகா....முருகா.....முருகா... அசுரர் கூட்டத்தை அழிக்க வா வா முருகா ....


R K Raman
ஜூன் 23, 2025 08:18

நம் மாநிலத்தில் சமய நம்பிக்கை வேறு ஓட்டு வேறு... இங்கு இலவசங்கள் மற்றும் ஓட்டுக்கான பணம் அன்பளிப்புகள் முக்கியமானவை. இதர மதங்களின் குழுக்கள் கட்டுப்பாட்டுடன் வாக்களிக்கும் ஆனால் சனாதனிகள் சாதிவாரியாகப் பிரிந்து செயல் படுவார்கள்...


Nalla Paiyan
ஜூன் 23, 2025 07:19

கூட்டத்தில் அண்ணாமலை மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர் அதையும் போட்டு இருக்கலாமே


venkat venkatesh
ஜூன் 23, 2025 06:03

OM Muruga


தாமரை மலர்கிறது
ஜூன் 23, 2025 05:25

முருக மாநாடு தமிழகத்தில் பிஜேபி ஆட்சிக்கு வழிவகுக்கும்.


Kasimani Baskaran
ஜூன் 23, 2025 03:53

முருகனின் நட்சத்திரக்கொடியை வைத்திருக்கும் நாட்டுக்கு வெற்றி உண்டாகட்டும்.


சண்முகம்
ஜூன் 23, 2025 03:49

திருப்பதி முருகன் கோயிலை தெலுங்கரிடம் இருந்து மீட்க வேண்டும்.


vadivelu
ஜூன் 23, 2025 07:04

திருமாவை, தெருமுருகனை , அமீரை கூட்டி போங்க மீட்டு தருவாங்க


V Venkatachalam
ஜூன் 22, 2025 22:11

தினமலருக்கு கோடானு கோடி நன்றிகள். ஆன்மீகத்தையும் தேச பக்தியையும் எங்களுக்கு ஒருசேர ஊட்டி வளர்த்த பெருமை முழுக்க முழுக்க தினமலருக்கே சேரும். விலைபோன ஊடகங்களில் இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தியே காணோம்.. ஜனநாயகத்தின் 4 வது தூண் தினமலரின் கைங்கர்யத்தால் உயிரோடு இருக்கிறது. வாழ்க தினமலர்..


K V Ramadoss
ஜூன் 22, 2025 22:02

அபாரமான அமைப்பு ஏற்பாடு.. முடிவில் முருக பக்தர்கள் அனைவரும் அமைதியாகவும் பொறுப்புணர்வுடனும் களைந்து சென்றது, குப்பைகளை திரட்டி குப்பை குட்டைகளில் போட்டது, நாற்காலிகளை தாங்களே ஒழுங்காக அடுக்கி வைத்தது போன்றவை மிகவும் போற்றத்தக்கது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை