உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., பயங்கரவாதத்துக்கு முஸ்லிம் தலைவர்கள் கண்டனம்

பாக்., பயங்கரவாதத்துக்கு முஸ்லிம் தலைவர்கள் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இதயங்களில் ரத்தம் கசிகிறது

''பஹல்காம் தாக்குதல் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. பயங்கரவாதிகளின் செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது,'' என்று ஹுரியத் மாநாட்டுத் தலைவர் மிர்வைஸ் பரூக் கூறினார்.அவர் கூறியதாவது: காஷ்மீர் படுகொலைகள் எங்கள் இதயங்களை துளைத்துள்ளன. படுகொலைக்கு முன், அப்பாவி மக்களிடம், முதலில் அவர்களின் மத அடையாளங்கள் குறித்து கேட்டுள்ளனர். பின்னர், குடும்பத்தினர் முன்னிலையில் கொலை செய்யப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம். இது நம்பமுடியாத செயல். இதை ஒருவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.தங்கள் சொந்தங்களை இழக்கும் வலியை காஷ்மீர் மக்கள் நன்கு புரிந்துள்ளனர். அவர்களை விட யார் இந்த துயரத்தை புரிந்துகொள்வார்கள்? கொல்லப்பட்டவர்களின் அன்புக்குரியவர்களின் வலியை எங்களை விட யார் அதிகம் உணர முடியும்? இந்த சம்பவத்தால் எங்கள் இதயங்களில் இரத்தம் கசிந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்பாவிகளை கொல்வது பாவம்

டில்லி ஜமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அஹ்மது புகாரி, நேற்று தனது வெள்ளிக்கிழமை உரையின் போது பயங்கரவாதத்தை கடுமையாகக் கண்டித்தார்.அவர் கூறுகையில், ''அப்பாவிகளைக் கொல்வது பாவம். இஸ்லாம் மதத்தின் பெயரால் இதுபோன்ற செயல்களை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. சமீபத்திய வகுப்புவாத வன்முறைகள் கவலை அளிப்பதாக உள்ளன. எந்தவொரு பிரச்னைக்கும் பயங்கரவாதம் தீர்வாகாது,'' என்றார்.

மதம் கேட்டு கொலை: வெறுப்பு சம்பவம்

பஹல்காம் படுகொலை குறித்து பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சையது ஷாநவாஸ் உசேன் கூறியதாவது: மத்தியில் பா.ஜ., அரசு வந்த பின், காஷ்மீரில் அமைதி ஏற்பட்டு சுற்றுலா வளர்ச்சி பெற்று வந்தது. இதற்கு முடிவுகட்ட மிகப்பெரிய சதி நடக்கிறது. சுற்றுலா பயணியரை படுகொலை செய்வதற்கு முன், நீங்கள் எந்த மதம் என கேட்ட விதம், மிகப்பெரிய வெறுப்பு சம்பவமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. பயங்கரவாதிகளின் எண்ணத்தை இந்திய மக்களும், அரசும் முறியடிப்பார்கள்.பயங்கரவாதத்துக்கும், பாகிஸ்தானுக்கும் எதிராக நமது நாடு ஒன்றுபட்டு நிற்கிறது. உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும். இதனால் அந்நாடு பயந்து நடுங்குகிறது. பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடியை இந்தியா தந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பயங்கரவாதத்தை ஒழிக்க சிறப்பு துவா

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, லக்னோ ஈத்கா இமாம் மவுலானா காலித் ரஷீத் பரங்கி மஹ்லி கூறியதாவது:நமது நாட்டில் இருந்தும், உலகம் முழுவதிலும் இருந்தும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்ய அனைத்து மசூதிகள் மற்றும் இமாம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இன்று வெள்ளிக்கிழமை ஜும்மாவையொட்டி, பயங்கரவாதத்தை ஒழிக்க சிறப்பு துவா ஏற்பாடு செய்ய அனைத்து மசூதிகள் மற்றும் இமாம்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Hindustani
ஏப் 27, 2025 19:40

We have to change the concept of secularism. It was ed only subsequently in the constitution. So nothing wrong in removing it. Because of that only some segments are taking advantage. All citizens should be treated equally. Law should be common to all people.


metturaan
ஏப் 27, 2025 14:25

அட...அட.... புல்லரிக்குது... திடீரென புத்தர்கள் முளைத்துள்ளனர்.... எல்லாம் பங்காளிய ஓரங்கட்றதால எழும் கூவல்கள்.... நம்பித்தான் கோவை ல சிலிண்டர் வெடிச்சதே... இன்னும் எத்தனை முறை?


Bhakt
ஏப் 26, 2025 15:24

Drama


Padmasridharan
ஏப் 26, 2025 10:52

மதம்_மொழி யை பார்த்து நட்புறவு செய்வதும், அவற்றை திணித்து மக்களை மாற்ற நினைப்பதும் ஒரு பயங்கரவாத செயல் போன்றுதான். ஓர் அல்லாஹ் படைத்த உலகத்தை நம்புவர்கள், அவரால்தான் எல்லா உயிரும், உயிரற்றவையும் படைக்கப்பட்டன என்றும் நம்புவார்கள். Bhãratha_India is a mixed place with diverse religious languages


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 26, 2025 10:38

உள்ளூரில் இருக்கும் முஸ்லிம்களை பாதுக்காக்க நீலிக்கண்ணீர் வழிக்கிறார்கள். இது நடிப்பு. இவர்களே திரும்பி நின்று பயங்கரவாதிகளுக்கு பண உதவி செய்வார்கள். பொறாமை குணம் உடல் பொருள் ஆவி ஊறிப் போய் விட்டது. பொறாமை குணத்தால் தான் இது போன்ற எனத் தொழில் செய்கின்றனர்.


Bhakt
ஏப் 26, 2025 15:24

உண்மை


anonymous
ஏப் 26, 2025 10:37

இது பாகிஸ்தான் மீது நடவடிக்கையை குறைக்க வடிக்கும் நீலிக் கண்ணீர் போல உள்ளது.


Dharmavaan
ஏப் 26, 2025 09:22

புலி பதுங்குகிறது


vbs manian
ஏப் 26, 2025 09:15

தேசியம் மரி க்கவில்லை. துடிப்போடு மின்னுகிறது.


Kasimani Baskaran
ஏப் 26, 2025 07:50

நீலிக்கண்ணீர்...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 26, 2025 08:53

நாற்பது சதவிகிதத்தை அடையும் முன்னர் நம்மை அன்பால் திக்குமுக்காட வைப்பார்கள் ... பிறகு நமக்கு உச்சம் செபாவுக்கு கொடுத்தது போல ஆப்ஷன் கொடுப்பார்கள் .... உயிரை விடு அல்லது மதம் மாறு என்று ....


சுரேஷ் சிங்
ஏப் 26, 2025 07:32

இவிங்களைப் பாத்தாலே பயமா இருக்கு.


சமீபத்திய செய்தி