உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விலை குறைக்கப்பட்டதா என நானே கண்காணிப்பேன்: நிர்மலா சீதாராமன்

விலை குறைக்கப்பட்டதா என நானே கண்காணிப்பேன்: நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து, பொருட்களின் விலை குறைக்கப்பட்டதா? என்பதை ஆய்வு செய்வதே தன்னுடைய முதன்மையான வேலை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதுமட்டுமில்லாமல், மக்களின் அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கு வரி விலக்கும், பல்வேறு பொருட்களுக்கான வரியையும் குறைத்து அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். இதன்மூலம், பேஸ்ட், பிஸ்கட், சர்க்கரை, நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை குறைகிறது. இந்த நிலையில், வரும் செப்.,22ம் தேதி முதல் பொருட்களின் விலை குறைப்பு நடவடிக்கையில் நிறுவனங்கள் ஈடுபடுகின்றனவா என்பதை கண்காணிக்க இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது; ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை வரும் செப்.,22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக தொழில் மற்றும் வணிகத் துறையினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரி குறைப்பினால் ஏற்பட்ட பொருட்களின் விலை குறைப்பு பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்போம் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர். எனவே, தொழில்துறை மற்றும் வணிகத்துறையினரிடம் இருந்து நான் நேர்மறைத்தன்மையைக் காண்கிறேன். நிச்சயமாக அவர்கள் விலையை குறைத்து, வாடிக்கையாளர்களுக்கு பலனை அளிப்பார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.செப்.,22ம் தேதி முதல் பொருட்களின் விலை குறைப்பு பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறதா என்பதைக் கவனிப்பதே என்னுடைய வேலையாக இருக்கும், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

nizam
செப் 07, 2025 08:57

பீகார் தேர்தல் வரை


அப்பாவி
செப் 07, 2025 06:57

போய் தி.நகரில் சுண்டைக்காய் வாங்கி கண்காணிப்பார்.


pakalavan
செப் 06, 2025 23:51

இன்னும் ஏன் பெட்ரோல் விலை குறையவில்லை ?


Tamilan
செப் 06, 2025 22:41

இவர்களின் கதையை கேட்கும் பச்சிளம்குழந்தைகள் அல்ல இந்தியர்கள். இவர்களின் கதையை கேட்டு தூங்கும் குழந்தைகளும் அல்ல . தமிழகத்தில் இருந்துகொண்டு எப்போது திருந்துவார்கள் இவர்கள் ?.


JANAKI RAM M
செப் 06, 2025 22:13

கச்சா எண்ணெய் விலை குறையும்போது அல்லது தற்போது சலுகை விலையில் கிடைக்கிறபோது பெட்ரோல் டீசல் எரிவாயு விலை குறைகிறதா என்று நீங்களே நேரிடையாக பார்க்க முடியாதா ... அவ்வாறு குறைந்தால் அதன் பலன்களை மக்களுக்கு அளிக்க முடியுமே...


ஆரூர் ரங்
செப் 06, 2025 22:18

நல்ல தரமான நெடுஞ்சாலைகள் போடப்பட்டது வணிகச் சாவடிகள் அகற்றப்பட்டது. இவற்றால் எ‌ரிபொரு‌ள் செலவு குறையவில்லையா?. அதற்கெல்லாம் பெட்ரோல் வரி மூலம்தான் நிதி கிடைத்துக் கொண்டிருக்கிறது.


theruvasagan
செப் 06, 2025 21:54

பெட்ரோல் டீசல் விலை பொருள்கள் உற்பத்தி மற்றும் வினியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் விலையை சீரமைத்தால்தான் விலை குறைப்பின் பலன் மக்களுக்கு கணிசமாக கிட்டும். வெறும் வரி குறைப்பினால் மட்டும் அல்ல.


K.n. Dhasarathan
செப் 06, 2025 21:07

கடந்த 11 வருடங்களாக ஜி.ஸ்.டீ. வரி வாங்கி, மக்களை சுரண்டி விட்டு, இப்போ தேர்தல் வரும்போது "வரி குறைப்பு " நாடகமா? , எப்படி ? பிரதமர் இங்கே வரும்போது திருக்குறள் சோள்வாரே அது போலவா? அதுவும் "நானே கண்காணிப்பேன்", என்னடா, தமிழ் நாட்டிற்கு வந்த சோதனை மழை, வெள்ளம், புயல் தமிழகத்தை பாதித்தபோது நிவாரணம் கொடுக்க மனம் இல்லாத, மனிதாபிமானம் இல்லாத இவரா மக்களுக்கு நல்லது செய்வார்? உலகத்திலே அதிக விலை கொடுத்து பெட்ரோல், டீசல், காஸ் வாங்குவது நாம் தான், தெரியுமா? ஒரு சிறிய கேள்வி தாயே 19 கிலோ வணிக சிலிண்டர் விலையை மட்டும் 51.50 ரூபாய் குறைத்தீர்களே, 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ஏன் குறைக்கவில்லை ? முன்பை விட குறைந்த விலையில் கச்ச என்னை வாங்கும்போது, அதன் பலனை மக்களுக்கு ஏன் கொடுக்கவில்லை ?, நீங்கள் மக்களுக்காக வேலை பார்க்கும் அரசா அல்லது மக்களை கொல்கிற அரசா?


Tamilan
செப் 06, 2025 20:50

நாட்டின் ஒட்டுமொத்த தொழில் துறையையும் முடக்கிவிட்டு அம்பானிகள் சொற்ப விலையில் இறக்குமதிசெய்ய அனுமதித்த பேடிகள் அரசு நாட்டில் விலை குறைந்ததா என்று கண்காணித்தார்களா?. பல ஆண்டுகளாக கண்காணித்தார்களா?


ஆரூர் ரங்
செப் 06, 2025 21:10

அம்பானியின் லாபம் அதிகரித்தால் மேலும் மேலும் தொழில் துவக்கி பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறார். கேடி பிரதர்ஸ்க்கும் மகன் மருமகனுக்கும் பணம் கிடைத்தால் ஜெர்மனி, இங்கிலாந்துக்கே லாபம்.


Rathna
செப் 06, 2025 20:48

கிட்டதட்ட 300 பொருட்கள் விலை குறைந்து உள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இதற்கான பயன் கிடைக்கும். அரசாங்கம் மறைமுக வரி துறையை முடுக்கி விடுவது மற்றும் பெனால்டி மூலம், வ்யாபாரிகள், முதலாளிகள் விலையில் ஏமாற்றுவது குறையும். வ்யாபாரிகள், தொழில் முதலாளிகள் GST வருவதற்கு முன்னால் பட்ட லஞ்ச லாவண்யம் கொஞ்ச நஞ்சம் அல்ல. வணிகவரித்துறை அனுமதி வாங்குவது முதல், கணக்கு முடிப்பது, enforcement துறை போன்ற துறைகள் மூலம் பட்ட அவதி கொஞ்ச நஞ்சம் அல்ல. அரசாங்கம் என்பது தொழிலை வளர்ப்பதற்கு மட்டும் வளப்படுத்துவதற்கே. அதுவே ஏழ்மையை ஒழிக்கும், நாட்டை வளப்படுத்தும்.


elango
செப் 06, 2025 20:34

பூதக்கண்ணாடி போட்டு பார்ப்பார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை