வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அடுத்தவர்களின் உழைப்பு க்கு தனது பெயர் , அப்போ...
மைசூரு: மைசூரு நகரின், வரலாற்று பிரசித்தி பெற்ற சாலைக்கு, முதல்வர் சித்தராமையாவின் பெயரை சூட்டும், மாநகராட்சியின் ஆலோசனைக்கு, அரச குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.மைசூரு நகரின், ஒன்டி கொப்பலு லட்சுமி வெங்கடேஸ்வரா கோவிலில் இருந்து, ராயல் இன் ஹோட்டல் ஜங்ஷன் வரையிலான சாலைக்கு, முதல்வர் சித்தராமையாவின் பெயரை சூட்ட, மைசூரு மாநகராட்சி ஆலோசிக்கிறது. இதற்கு ம.ஜ.த., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா ஆதரவு தெரிவித்து, கட்சி தலைவர்களின் எரிச்சலுக்கு காரணமானார்.இதற்கிடையே அரச குடும்பத்தின் யதுவீர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.இது குறித்து, மைசூரில் அவர் அளித்த பேட்டி:பிரின்செஸ் சாலைக்கு முதல்வர் சித்தராமையாவின் பெயர் வைப்பதால், அரச பாரம்பரியத்துக்கு களங்கம் ஏற்படும். மஹாராஜா சாமராஜ உடையார் மற்றும் மஹாராணி கெம்ப நஞ்சம்மாண்ணியின் மகள்களான இளவரசிகள் கிருஷ்ணஜம்மணி மற்றும் செலுவாஜம்மணியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.கல்வி, சுகாதாரம் மற்றும் சமுதாய நலனுக்கு இவர்கள் அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் நோக்கில், சாலைக்கு இவர்களின் பெயர் சூட்டப்பட்டது. முதல்வர் சித்தராமையாவின் பங்களிப்பை கவுரவிக்கலாம் என்பதில், மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்காக பிரின்சஸ் சாலை போன்ற, வரலாற்று இடங்களின் அடையாளங்களை அழிப்பது, மைசூரின் பாரம்பரியத்துக்கு செய்யும் அவமதிப்பாகும்.உடையார் குடும்பத்தினர், மக்களின் நலனுக்காக செய்த சாதனையின் அடையாளமாகும். அடையாளங்களை பாதுகாத்து, வருங்கால சந்ததியினருக்கு அறிமுகம் செய்ய வேண்டும். பிரின்சஸ் சாலையின் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா அளித்த பேட்டி:முதல்வர் சித்தராமையா, மைசூரின் மைந்தன். கொள்கை ரீதியில் நான் அவரை எதிர்க்கிறேன். ஆனால் சாலைக்கு பெயர் சூட்டும் விஷயத்தில் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டேன்.பெரும்பான்மையுடன் இரண்டு முறை முதல்வரானார். மைசூருக்கு இவரது பங்களிப்பு உள்ளது. எனவே சாலைக்கு இவரது பெயரை சூட்டுவதில் தவறு இல்லை. இது குறித்து, சர்ச்சைகள் நடப்பது குறித்து, எனக்கு தெரியாது. இந்த சாலைக்கு பிரின்சஸ் என, பெயர் சூட்டப்பட்டதாக, எம்.பி., யதுவீர் கூறியுள்ளார். ஆனால் சாலைக்கு எந்த பெயரும் சூட்டவில்லை என, சிலர் கூறுகின்றனர். ஒரு வேளை எந்த பெயரும் சூட்டப்படவில்லை என்றால், சித்தராமையாவின் பெயர் சூட்டலாம். இதில் தவறேதும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்தவர்களின் உழைப்பு க்கு தனது பெயர் , அப்போ...