உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரு ரவுடி கொலை கள்ளக்காதலி தலைமறைவு

மைசூரு ரவுடி கொலை கள்ளக்காதலி தலைமறைவு

மைசூரு: மைசூரு ரவுடி கொலை செய்யப்பட்டதற்கு முன்விரோதம் காரணம் என, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கள்ளக்காதலி தலைமறைவாக உள்ளார்.மைசூரு, அனுகனஹள்ளியை சேர்ந்தவர் ரவுடி சூர்யா எனும் டோர்சுவாமி 35. இவர், சில மாதங்களாக ஸ்வேதா என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதனால், அவரது மனைவி தீபிகாவும், சூர்யாவின் தாயும் வீட்டை விட்டு வெளியேறினர்.சில தினங்களுக்கு முன்பு சூர்யா, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இவரது கொலையில் ஸ்வேதாவிற்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது.மைசூரு போலீசார் விசாரித்தனர். ஸ்வேதாவின் மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால், போலீசார் அவர் மீது சந்தேகம் அடைந்தனர்.தவிர வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.சில ஆண்டுகளுக்கு முன்பு சூர்யாவிற்கும், சரத் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரத், சூர்யாவை கொலை செய்வதற்கு திட்டமிட்டார்.சம்பவத்தன்று, ஸ்வேதாவும், சூர்யாவும் தனியாக இருக்கும் நேரத்தில் சரத்தின் நண்பர்கள் கிரண், சேகர், சுனில் குமார் மற்றும் இரண்டு சிறுவர்கள், அவரை குத்திக் கொலை செய்துள்ளனர். ஸ்வேதா அங்கிருந்து எப்படியோ தப்பிச் சென்றுவிட்டார் என தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி