உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரூ ஓட்டலில்வெடித்தது வெடிகுண்டு உறுதியானது: என்ஐஏ விசாரணை

பெங்களூரூ ஓட்டலில்வெடித்தது வெடிகுண்டு உறுதியானது: என்ஐஏ விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரூ: கர்நாடக மாநிலம் பெங்களூரூ அருகே இந்திரா நகரில் உள்ள ஓட்டலில் மர்ம பொருள் வெடித்ததில் 8 பேர் காயமுற்றனர். 3 பேரிடம் விசாரணை நடக்கிறது.ஓட்டலில் வெடித்தது வெடிகுண்டு என்பதை முதல்வர் சித்தராமையா உறுதி செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்திரா நகரில் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. வெடித்தது வெடிகுண்டா அல்லது சிலிண்டரா, மர்ம பொருள் ஏதும் வெடித்ததா, வெடிகுண்டு ஏதும் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சம்பவ இடத்தில் போலீசார், தீயணைக்கும் படையினர் குவிந்துள்ளனர். இந்த வெடி விபத்தில் ஓட்டல் ஊழியர்கள் 3 பேர், வாடிக்கையாளர் ஒருவர் என 8 பேர் காயமுற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l2hvb0sz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முதல்வர் உறுதி

இந்நிலையில், ஓட்டலில் வெடித்தது வெடிகுண்டு தான் என்பதை உறுதி செய்துள்ள முதல்வர் சித்தராமையா, வாடிக்கையாளர் போல் வந்த ஒருவர் உணவகத்தில் வெடிகுண்டு வைத்துச் சென்றதாக கூறினார்.

3 பேரிடம் விசாரணை

இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்.ஐ.ஏ., விசாரணை

மர்மப் பொருள் வெடித்தது தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை துவக்கினர். சி.சி.டி.வி., காட்சிகள் சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ