மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத ஆண் சடலம்
01-Oct-2024
தொழிலாளி உடல் மீட்பு
01-Oct-2024
ரன்ஹோலா: கூலி தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.டில்லி புறநகர் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. ரன்ஹோலா பகுதியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், 35. இவர், கட்டுமான ஒப்பந்தத் தொழில் செய்கிறார். வேலைக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக புதன்கிழமை இரவு பிரகாஷுடன் ஒரு தொழிலாளி தகராறு செய்துள்ளார்.அதன் பிறகு நேற்று காலை வழக்கம் போல் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் சென்று பார்த்தபோது, அவர் இறந்துகிடந்தார்.தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பிரேத பரிசோதனைக்குப் பிறகு விசாரணையை தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
01-Oct-2024
01-Oct-2024