உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மர்மம் விலகியது; கேரளாவில் 3 புலிகள் உயிரிழப்புக்கு காரணம் இதுதான்!

மர்மம் விலகியது; கேரளாவில் 3 புலிகள் உயிரிழப்புக்கு காரணம் இதுதான்!

வயநாடு: கேரளாவில் மூன்று புலிகள் மரணத்திற்கான காரணத்தை வனத்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. ஆண் புலி தாக்கியதில், 3 குட்டிகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z5u4fep3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கேரள மாநிலம் வயநாடு பஞ்சரக்கோடு பகுதியில் ராதா, 45, என்ற பெண், சில தினங்களுக்கு முன் புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து, வயநாடு வைதிரி பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் அழுகிய நிலையில், ஒரு புலியின் உடல் கிடைத்தது. அது, ராதாவை கொன்ற புலி என தெரிவிக்கப்பட்டது.இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே மேலும் மூன்று புலிகள் இறந்து கிடந்தன. வயநாடு குறிச்சியாடு வனப்பகுதிக்குள் இரண்டு புலிகளின் உடல்களை, ரோந்து பணிக்கு சென்ற வனத்துறையினர் மீட்டனர். அருகே உள்ள காபி தோட்டத்தில் இன்னொரு புலியும் இறந்து கிடந்தது.அடுத்தடுத்து மூன்று புலிகள் உயிரிழந்ததால், இதற்கான காரணத்தை கண்டறிய சிறப்புக் குழுவை அமைத்து, அம்மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே.சுசீந்திரன் உத்தரவிட்டார். இதற்காக, வடக்கு மண்டல தலைமை வனக்காவலர் கே.எஸ்.தீபா தலைமையில் எட்டு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. புலிகள் மரணத்திற்கான காரணத்தை வனத்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.இது குறித்து, சிறப்புக்குழு அதிகாரிகள் கூறியதாவது: இளம் குட்டிகளைக் கொண்ட பெண் புலிகள் பொதுவாக இனச்சேர்க்கை காலத்தில், ஆண் புலிகளிடம் இருந்து விலகி இருக்கும். இதனால் ஆண் புலிகள் கோபத்தில் இருக்கும். அப்போது தனது கோபத்தை குட்டிகளிடம் ஆண் புலிகள் காட்டும். உயிரிழந்த மூன்று குட்டிகளுக்கும் இதே கதி ஏற்பட்டிருக்கலாம்.குட்டிகளுக்கு கழுத்து மற்றும் உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயங்கள் மற்றொரு புலியின் தாக்குதலால் ஏற்பட்டதாகத் தெரிகிறது. உயிரிழந்த ஆண் புலியின் மரணத்திற்கு காரணம், முதுகெலும்பு முறிவு மற்றும் முதுகுத் தண்டு துண்டிக்கப்பட்டது.அதே நேரத்தில் பெண் புலியின் மரணத்திற்கு காரணம் மண்டை எலும்பு முறிவு மற்றும் மூளையில் ஏற்பட்ட காயம் ஆகும். இரண்டுமே மற்றொரு புலியின் தாக்குதலால் ஏற்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையின் போது புலி கடித்த அடையாளங்களும் காணப்பட்டன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதனால் புலிகள் மரணத்திற்கான மர்மம் விலகியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Laddoo
பிப் 07, 2025 17:59

எங்கேயோ இடிக்குதே கதை வசனம் டிரெக்ஷன் படு மோசம்.மர்மம் விலகவில்லை.


Sampath Kumar
பிப் 07, 2025 10:43

காமத்திற்கு அணைத்து உயிரினமும் பலிகடா தான் குறிப்பாக ஆண் இனம் காமத்திற்கு வெகுவாக பாதிக்க படுவதை காண முடிகிறது அதனால் தான் சமூகத்திலும் சரி காட்டிலும் சரி பெண் இனம் தாக்கப்படுகிறது இது இயற்கையின் சித்து விளையாட்டு யாரும் ஒன்னும் பண்ணமுடியாது ஆர்ய திராவிட கொலை கும்பல்கள் கொள்ளை கும்பல்கள் காமத்தால் அடிவாங்கியவர்கள் என்பதை சரித்திரம் நிரூபித்து உள்ளது


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 07, 2025 11:30

அயலக அணி சரக்கு சாப்பிட்டுவிட்டு கருத்து போட்டியா நீயி ??


சண்முகம்
பிப் 07, 2025 10:37

மனுஷனைப் போல புலி...


Raj Kamal
பிப் 07, 2025 10:32

ஏன் ஆரிய பொய்யாக இருக்கக்கூடாது?


venugopal s
பிப் 07, 2025 10:31

மிருகங்களின் வாழ்க்கை முறை பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் இங்கும் வந்து கருத்து பதிவு செய்வது நகைப்புக்குரியது!


கோமாளி
பிப் 07, 2025 10:15

என்னடா இது.. திராவிடத்தனமான பொய்யா இருக்கு


Ganesun Iyer
பிப் 07, 2025 09:55

கேரளா போலீஸ்: அப்பாடா, யாரு அந்த சாரு? யாருது அந்த காரு? மாதிரி கேள்வி இல்ல.


Anonymous
பிப் 07, 2025 09:16

என்னங்க, இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? புலி அடிச்சு மூன்று புலி செத்துருச்சா? அதென்ன வன்மம் வச்சு கொன்னு கொன்னு போட, புலி என்ன மனுஷனா? ஒரு புலி செத்துச்சுன்னா நம்பலாம், மூணு புலி இப்படி சொல்லி வச்ச மாதிரி செத்திருக்குன்னா, ரொம்ப சந்தேகமா இருக்கு.......


Duruvesan
பிப் 07, 2025 09:53

நாங்க அதிமுக காரன் தீயமுக கொடிய கட்டிட்டு போனான்னு சொன்னா நம்புவே, ஆனா இதை நம்ப மாட்டே, எல்லோருக்கும் விடியல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை