உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த, ஐ.இ.டி வகை வெடிகுண்டு வெடித்து 2 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழித்து கட்ட, பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் சில்கர் கிராமத்தில் ஐ.இ.டி வகை வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர்.அப்பகுதியில், வழக்கம் போல், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது வெடிகுண்டு வெடித்தது. இதில் இரண்டு சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர். சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அனாமிகா
ஜூன் 24, 2024 07:35

இன்னும் இருவது வருஷத்துக்குள் ஒழிச்சுக் கட்டிருவோம்.


subramanian
ஜூன் 23, 2024 22:20

எங்கள் வீரர்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்


Tetra
ஜூன் 23, 2024 19:42

உள்ளூர் அரசியல் வியாதிகளின் துணை இல்லாமல் இப்படி நடக்காது. மத்திய அரசு தாட்சண்யமில்லாமல் இப்படிப்பட்ட அரசியல் வியாதிகளையும் அவர்களுக்கு பணம் கொடுக்கும் வெளிநாட்டு சக்திகளையும் ஒடுக்க வேண்டும்


Jai
ஜூன் 23, 2024 19:36

உண்மையில் காங்கிரஸ் திமுக போன்ற கட்சிகளை அண்டி பிழைக்கிறது. திமுக மீது தற்போது தமிழ்நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளனர். அதை தணிக்க இப்படி திசைதிருப்ப இப்படியெல்லாம் முயற்சி


P. VENKATESH RAJA
ஜூன் 23, 2024 18:37

ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி