உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதிலுமா போலி?: மோடி, அமித்ஷா பெயர்களில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக விண்ணப்பம்

இதிலுமா போலி?: மோடி, அமித்ஷா பெயர்களில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக விண்ணப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரில் போலி விண்ணப்பங்களும் வந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பங்களை பிசிசிஐ பெற்று வந்தது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் (மே 27) முடிவடைந்தது.இந்த நிலையில், மொத்தம் 3000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலும் போலியான விண்ணப்பங்களாக கிடைக்கப்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக், தோனி உள்ளிட்டோர் பெயரிலெல்லாம் போலியாக விண்ணப்பித்துள்ளனர்.இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் கூகுள் பார்ம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டதால், போலிகள் அதிகம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் தகுதியான விண்ணப்பங்களை பரிசீலித்து அவர்களில் ஒருவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க உள்ளது பிசிசிஐ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தத்வமசி
மே 28, 2024 12:36

நமது நாட்டில் போலிகள் அதிகமாக உருவாகி விட்டனர். வதந்திகளை பரப்புவதே இவர்களின் வேலை. அதுவும் குறிப்பாக மக்களுக்கு எதிராக, நாட்டுக்கு எதிராக, நாட்டில் கலக்கம் பிறக்க வேண்டும் என்றே ஒரு குழு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உலவி வருகிறது. அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.


Sampath Kumar
மே 28, 2024 11:56

போலி ஆட்சி யாளர்கள் போலி மனிதர்கள் ஆளும் வரை இது போன்று வந்து கொண்டு தான் இருக்கும் அன்றய பிடித்து விட்டது


vetri
மே 28, 2024 11:37

விளையாடி ஜெயிக்கிறோமோ இல்லையோ... பேசி பேசியே இந்திய அணியை நம்பர் ஒன் இடத்துக்கு கொண்டு வந்துருவாங்க


venugopal s
மே 28, 2024 11:36

போலியா?


Ramanujadasan
மே 28, 2024 11:28

பேசாமல் நமது முதல்வரை இந்தியா கிரிக்கெட் அணி பயிற்ச்சியாளராக்கி விடலாம். அவர் தான் மிக சிறந்த ராஜ தந்திரி, சுழல் பந்து வீச்சாளர், உலகின் சிறந்த மட்டையாளர், நம்பர் ஒன்னு விக்கெட் கீப்பர் மற்றும் FIELDER. அவர்க்கு இணையாக மற்ற ஒருவர் இத்தரணியில் இல்லை


ஆரூர் ரங்
மே 28, 2024 11:25

செந்தில் பாலாஜி பெயர் உள்ளதா? கருக்கா?


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ