மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்கி சிக்கிய அதிகாரி வீட்டில் ரூ.4.27 கோடி பறிமுதல்
5 hour(s) ago | 13
பாட்னா:பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை துணை சபாநாயகராக ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மகேஸ்வர் ஹசாரி பதவி வகித்தார்.சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த அவர், மாநில அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் அல்லது லோக்சபா தேர்தலில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.இந்நிலையில், துணை சபாநாயகர் பதவிக்கு, அதே கட்சியைச் சேர்ந்த நரேந்திர நாராயண் யாதவ் ஒருமனதாக நேற்று முன் தினம் தேர்வு செய்யப்பட்டார். நாராயண் யாதவ் கூறுகையில், ''சட்டசபையில் உறுப்பினர்கள் இடையே பாகுபாடு காட்ட மாட்டேன். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு அளிப்பேன். சபையை சுமுகமாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.
5 hour(s) ago | 13