உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பள்ளிகளில் தேசிய கீதம் கட்டாயம்: மாநில அரசு உத்தரவு

காஷ்மீரில் பள்ளிகளில் தேசிய கீதம் கட்டாயம்: மாநில அரசு உத்தரவு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தேசிய கீதத்துடன் வகுப்புகளை துவக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ikerye1l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக காஷ்மீர் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அலோக் குமார் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: சரியான வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளில் காலை பிரார்த்தனை கூட்டம் தேசிய கீதத்துடன் துவங்க வேண்டும். காலை பிரார்த்தனை கூட்டம் என்பது ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஆகியவற்றை வளர்ப்பதற்கான தளங்களாக செயல்படுகின்றன. காஷ்மீரின் பல பள்ளிகளில் இதுபோன்ற குறிப்பிடத்தக்க பாரம்பரியம் ஒரே மாதிரியாக மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.மேலும், காலை பிரார்த்தனை கூட்டங்களுக்கு சிறப்பு விருந்தினர்களை அழைத்து சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

veeramani
ஜூன் 14, 2024 19:17

காஷ்மீர் பள்ளிகளில் பார்த்த நாட்டின் தேசியகீதம்.. ஜன காண மனா அவசியம் படப்படவேண்டும். எனது சிறு வேண்டுகோள்.. இந்திய பள்ளிகள் அனைத்திலும் தேசியகீதம் பாடுவது கட்டாயம் என சட்டம் இயற்றவேண்டும்


J Ravi
ஜூன் 14, 2024 11:41

வெரி குட் டெஸிஸின்


J Ravi
ஜூன் 14, 2024 11:40

Very good decision


vadivelu
ஜூன் 14, 2024 11:38

இதற்கே இத்தனை வருடங்கள் ஆகி இருக்கே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை