உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு; அடுத்தாண்டில் தொடங்கும்!

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு; அடுத்தாண்டில் தொடங்கும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்தாண்டு தொடங்கும் என்றும், புள்ளி விபரங்கள் 2026ம் ஆண்டில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நடைமுறை, பிரிட்டீஷ் ஆட்சிக்காலம் முதல் அமலில் உள்ளது. முதல் கணக்கெடுப்பு, 1872ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் நடத்தப்படுகின்றன.கடைசியாக, 2011ல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021ல் கணக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக பணிகள் தடைபட்டன. இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவக்கப்பட்டு, 2026 மக்கள் தொகை விபரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையில் சிறு மாற்றம் செய்யப்பட உள்ளது. வரும் காலங்களில், கணக்கெடுப்பு, 2025-2035, 2035-2045 என கணக்கெடுப்பு நடத்தலாம் என்ற யோசனை அரசுக்கு எழுந்துள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும் போது, மக்களிடம் கேட்பதற்கு என 31 கேள்விகள் தயார் செய்யப்பட்டுள்ளன.வீட்டில் உள்ளவர்கள் எத்தனை பேர், வீட்டின் தலைவர் பெண்ணா? வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன, திருமணம் ஆனவர்கள் எத்ததனை பேர், தொலைபேசி, இணையதள வசதி, மொபைல்போன், சைக்கிள், பைக் அல்லது ஸ்கூட்டர், சொந்தமாக கார் உள்ளதா? ஜீப் அல்லது வேன் இருக்கிறதா? குடிநீர் வசதி, மின்வசதி, கழிவறை வசதி , சமயலறை மற்றும் கேஸ் இணைப்பு, சமைப்பதற்கு முக்கிய எரிபொருள் என்ன? ரேடியோ, டி.வி. வசதி உள்ளதா? உள்ளிட்ட கேள்விகள் அடங்கும்.சேகரிக்கப்படும் புள்ளி விவரங்கள் தொகுக்கப்பட்டு 2026ம் ஆண்டு வெளியிடப்பட உள்ளன.இந்த கணக்கெடுப்பில், ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அது மத்திய மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

N DHANDAPANI
நவ 01, 2024 20:43

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் எழுப்பும் கேள்வி உள்நோக்கம் கொண்டது ......தேவையற்றது , கேட்பதில் ஒரு நியாயம் இருக்க வேண்டாமா? காங்கிரஸ் தொடர்ந்து அர்த்தமற்ற கேள்விகளை கேட்பதில் தன்னுடைய திறமையை காட்டி வருகிறது


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 29, 2024 08:28

இந்திய மக்கள் தொகை புள்ளி விவர கணக்கெடுப்பின்படி பின்னாடியே இந்திய குடியுரிமை சட்ட கணக்கெடுப்பு ( National Citizenship Act ) வரும் அதன் பின்னர் தான் ஆட்டமே இருக்கு....எது நடக்க வேண்டுமோ அது நல்லபடியாகவே நடக்கும்....!!!


Raa
அக் 28, 2024 20:45

இவ்ளோ செலவு செய்வதற்கு பதில், பிறப்பு-இறப்பு டேட்டாவை இப்போதிருக்கும் மக்கள் தொகையுடன் கலந்துவிட்டாலே + & - ஆகி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்துவிடுமே? எல்லா டீப்பார்ட்மெண்டும் ஆன்லைனில் உள்ளனவே.....


Sivagiri
அக் 28, 2024 20:29

ஆதார் கார்ட் நம்பர் - பான் கார்ட் நம்பர் - பாஸ்போர்ட் நம்பர் - ரேஷன் கார்ட் நம்பர் - கேக்க மாட்டாங்களா , எல்லாம் செக் பண்ணி ரெகார்டுல சேர்க்கணும் - எல்லா ஊர்லயும் பீஹார் / உபி / மேவ - ன்னு சொல்லிட்டு , பங்களாதேஷ் , பர்மா , பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் காரங்க எக்கச்சக்கமா பெருகிட்டாங்க - அமெரிக்காகாரனே , வித்தவுட்-அன்னியர்களை வெளியேற்றும் வேலையை ஆரம்பிச்சிட்டாங்க , ரஷியால உள்ளேயே போக முடியாது - -


GMM
அக் 28, 2024 19:58

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்திய குடிமகன் என்று உறுதி செய்ய ஆதாரம் வேண்டாமா? பிறப்பு பதிவு, அரசு பள்ளி சான்று உதவும். ஆதார் முகவரி அடையாளம். வாக்காளர் அட்டையும் அரசு ஆவண அடிப்ஸ்டியில் இல்லை. சாதி கணெக்கெடுப்பு எடுக்கு முன் சாதி கலப்பு, மத மாற்றம் தடைசெய்ய வேண்டும்.


Arumugam Saravanan
அக் 28, 2024 19:35

ஜாதிவாரி மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஜாதி உட்பிரிவு அனைத்தும் எடுக்க வேண்டும் அதன் படி இடஒதுக்கீடு அமலாக்க வேண்டும் ஆறுமுகம் என்கிற சரவணன் புதுச்சேரி மாநிலம் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்


Oru Indiyan
அக் 28, 2024 19:31

சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதி சிரிப்பார்.


Sundar R
அக் 28, 2024 18:58

வடிவேலு பக்கத்து வீட்டு மளிகைக் கடைக்காரரிடம்.... ஏம்பா உன் ஜாதி என்ன? மளிகைக் கடைக்காரர்: உனக்கு என்ன சாமான் வேணுமோ? அதைக் கேளு. அதை விட்டுட்டு "நான் என்ன ஜாதி" என்று கேட்டால் உனக்கு சாமான் இருக்காது. வடிவேலு வாசலில் வரும் பழைய பேப்பர் வாங்கும் வியாபாரியைப் பார்த்து... தம்பி உன் ஜாதி என்ன? பழைய பேப்பர் வாங்கும் வியாபாரி: யோவ் பழைய பேப்பர் இருந்தால் போடு. அதுக்கு மேல என் ஜாதி என்ன என்று கேட்டால் அடித்து கிடித்து எல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டேன். உன் துணியை அவுத்து ஓட விட்டுவிடுவேன் வடிவேலு வீட்டுக்கு நடிகர் பார்த்திபன் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியாக வருகிறார்.... பார்த்திபன் வடிவேலுவைப் பார்த்து: உன் ஜாதி என்ன? வடிவேலு: நான் எங்கு ஓடி ஒளிந்து மறைந்தாலும் கரெக்டா வந்து விடுகிறாயேப்பா நீ ஏன்யா இந்த வேலைக்கு வந்தே? ஒண்ணு செய் முதலில் பக்கத்து கடையில் உள்ள மளிகைக் கடைக்காரரிடம் போய் இதே கேள்வியைக் கேளு. பிறகு இங்கு வந்து wait பண்ணு. பழைய பேப்பர் வாங்கும் வியாபாரி வருவார். அவரிடமும் இதே கேள்வியைக் கேளு. என்னை விட்டு விடு. நான் எங்கேயாவது ஓடி விடுகிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை