உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேஷனல் ஹெரால்டு மோசடி; ரூ.142 கோடி பயன் அடைந்த சோனியா, ராகுல்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

நேஷனல் ஹெரால்டு மோசடி; ரூ.142 கோடி பயன் அடைந்த சோனியா, ராகுல்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடைய 142 கோடி ரூபாய் பணத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் பயன் அடைந்துள்ளதாக, டில்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு, 'யங் இந்தியன்ஸ்' நிறுவனம் வாங்கியது. யங் இந்தியன்ஸ் நிறுவனத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=735cq5dd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

2021ல் பாய்ந்தது வழக்கு

இதைத்தவிர, காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதில் உள்ளனர். ஏ.ஜே.எல்., நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, டில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை, 2021ல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. மோசடியில் தொடர்புடைய, 751 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியும் வைத்துள்ளது.

குற்றப்பத்திரிகை

இந்த விவகாரத்தில் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், அக்கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா, சுமன்துபே உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் டில்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

142 கோடி ரூபாய்

அப்போது, ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடைய 142 கோடி ரூபாய் பணத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் பயன் அடைந்துள்ளனர். அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கும் வரை அவர்கள் பயன் பெற்றுள்ளனர். அவர்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்தது மட்டுமின்றி, தற்போது வரை அதை அனுபவிக்கின்றனர். இவ்வாறு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சிக்கலில் ராகுல், சோனியா!

இதனை டில்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆஜராகி தெரிவித்தார். அமலாக்கத்துறையின் இந்த குற்றச்சாட்டு ராகுலுக்கும், சோனியாவுக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 11, 2025 13:33

விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்வது எப்படி என்று தமிழ்நாட்டு தமிழின தலைவர்களிடத்தில் டியூஷன் வைத்து கற்றுக்கொள்ளட்டும் பப்பு .. சர்க்கரையை எறும்பு நின்றுவிட்டது ..சாக்கை கரையான் தின்று விட்டது ... என்று ஜல்லி அடிக்க கற்றுக்கொள்ளட்டும்


N Srinivasan
மே 21, 2025 20:27

இன்று என்ன நாள்? 21-05 ......எந்த ஒரு காங்கிரஸ் காரனும் உன்னோட அப்பாவிற்கு உங்களோட கணவருக்கு ஒரு மரியாதை கூறுவான் என்று எதிர் பார்த்தேன்.......ஒருத்தர் கூட வாய் திறக்கவில்லை. நீங்களாவது அவரை நினைத்த்தீர்களா இல்லையா?


joe
மே 21, 2025 18:56

ராகுலின் குடும்பமே ஊழல் அரசியல் குடும்பம் .சோனியா அவர்களின் மருமகனும் மெகா ஊழல் பேர்வழி .அதனால்தான் ராகுலின் பேச்சு இரண்டும் கெட்டான் பேட்ச்சாக உள்ளது .இப்படியும் மானங்கெட்ட அரசியல் தேவையா...


sankaranarayanan
மே 21, 2025 18:24

நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடைய 142 கோடி ரூபாய் பணத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் பயன் அடைந்துள்ளதாக, டில்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு இன்று வரை சாதாரண வட்டி போட்டு அவர்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும் இது மக்களின் பணம். விரயம் அடிக்கப்பட்ட பணம்


என்றும் இந்தியன்
மே 21, 2025 17:43

சோனியாவை இப்படி வெறும் ரூ 142 கோடி முதலாளி என்று சொல்வது மிக மிக கேவலமான வார்த்தைகள்.


joe
மே 21, 2025 19:04

மெகா ஊழல் அரசியல் குடும்பம் .


சிந்திப்பவன்
மே 21, 2025 17:07

நண்பர்களே மனம் தளர வேண்டாம் . .எப்படியும் இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளில் தீர்ப்பு வந்து விடும் . அப்பொழுது சொர்க்க வாசிகளாக இருக்கும் தாயும் மகனும் அங்கேயே சிறையில் அடைக்கப்படுவர் தர்மமே வெல்லும்


Sudha
மே 21, 2025 17:05

உண்மையில் நிறுவனங்கள் தொடர்புடைய ஆடிட்டர்கள், டைரக்டர்கள் அனைவரையும் கொண்டு நிறுத்தினால் நன்றாக இருக்குமே. அமலாக்க துறைக்கும் காங்கிரஸ் போன்ற எதிர் கட்சிகளுக்கும் வாழ்வா சாவா எனும் நேரம் வந்துள்ளது. இன்று வரை பசியார் கார்த்திக் கோமகனார் மீதான வழக்குகள் முடிவுக்கு வரவில்லை. இப்படியே ஸ்ன்ச்ல திடீரென்று இந்த கூட்டத்திற்கு மவுசு கூடிவிடும். ஜாக்கிரதை


Sridhar
மே 21, 2025 16:28

நம்ம ஊரு திருட்டு கும்பல் செஞ்ச விஷயங்களோடு ஒப்பிட்டு பாக்கும்போது இவிங்க மேட்டர் ஜூஜிபி போல தெரியுதே என்ன இருந்தாலும் திருட்டு திருட்டுதான், அதுக்கான தண்டனைய ஒடனே கொடுக்கணும். சும்மா ராவுல் கூட கெழவனான பிறகு தண்டனை கொடுத்தால், பார்பதற்க்கே பரிதாபமாக இருக்கும். சீக்கிரமே உள்ள தள்ளுங்க.


Rathna
மே 21, 2025 16:22

சுதந்திர போராட்டத்தில் 5000 சுதந்திர போராட்ட வீரர்கள் அளித்த தொகையை கொண்டு ஆரம்பிக்கப்பட்டு ஒரு பத்திரிகை நிறுவனம் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வந்ததே தவறு. அதற்கு பணம் கொடுத்தவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை. அவர்களது வாரிசுதாரர்கள் எவருடைய பேரும் இல்லை. காங்கிரஸில் 3 பேர் பங்காளர்களாக இருந்தவர்களும் மேலுலகம் போய் விட்டார்கள். 2000 கோடி சொத்துக்கள் பல பெரிய நகரங்களில் உள்ளது. ஆனால் அரசியல் மறைமுக உறவு காரணமாக அரசு நடவடிக்கை எடுக்குமா?


vadivelu
மே 21, 2025 16:20

ஐந்து ரூபாய்க்கு வாங்கி ஐம்பது கோடிக்கு விற்றால் திருட்டுத்தனம்தானே.