உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் சோனியா, ராகுலுக்கு டில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு, 'யங் இந்தியன்ஸ்' நிறுவனம் வாங்கியது.யங் இந்தியன்ஸ் நிறுவனத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். இதைத்தவிர, காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதில் உள்ளனர்.ஏ.ஜே.எல்., நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, டில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை, 2021ல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.இந்த விவகாரத்தில் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், அக்கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா, சுமன்துபே உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்கு, எந்த வழக்கையும் விசாரிக்க உரிமை அவசியம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையை மே 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

M Ramachandran
மே 02, 2025 20:28

இதனை நாள் ஜிங்கிடி ஜிங்கிடி என்று ஆட்டம் போட்டு கொண்டிருந்தார்கள். இனி அதிக சத்தமாக கூவ மாட்டார்கள்.


sankaranarayanan
மே 02, 2025 19:04

உன்னாலே நான் கேட்டேன் என்னாலே நீ கேட்டாய் என்று தாயும் தனையனும் அவரவர்கள் காதை பிடித்துக்கொண்டு பாரத மாதா படத்தின்முன்பு நின்று கொண்டு தோப்புகரணம் போடுங்கள் பாவம் நீங்கும்.


c.mohanraj raj
மே 02, 2025 18:07

இன்னும் எத்தனை வருடங்களுக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பவீர்கள்.


Nagarajan D
மே 02, 2025 17:54

நோட்டீஸ் அனுப்பி ஜாமீன் தருவானுங்க அவ்வளவு தான்... முக்கியமான நிபந்தனைகள் என்ன என்றால் நீ வெளி நாடுகளுக்கு போக கூடாது நீ பாஸ்போர்ட் ஒப்படைக்கணும் என்று சொல்வானுங்க.. நாளைக்கே சிபல் போன்ற தேசதுரோகிகளை வைத்து பேரம் பேசி பெட்டி வாங்கிட்டு இடைக்கால தடை உத்தரவு போடுவானுங்க... அந்த இடைக்கால தடை பப்பு இயற்கையாக வயதாகி செத்தாலும் தடையாவே இருக்கும்


Sudha
மே 02, 2025 17:42

ஒரு 15 வருடங்களாக நடந்து வரும் கேஸ். அது ஏன் ரோஸ் அவன்யு கோர்ட் அது இது என்று? அப்பதான் மேல மேலே அப்பீல் செய்ய வசதியா? எல்லா கேஸும் இங்கே தான் ஆரம்பிக்குதா? எனக்கென்னவோ முழு டெல்லி யையும் புரட்டி போடணும்னு தோணுது


KRISHNAN R
மே 02, 2025 17:21

என்ன பன்னா என்ன.... எல்லா கூட்டணி அமைத்து..... மக்களுக்கு ?... திட்டம் போட்டு வுழைப்ப்பர்கள்


Tc Raman
மே 02, 2025 17:02

கவர்னருக்கு குடியரசு தலைவருக்கும் மூன்று அத கேடு கொடுக்கும் கோர்ட் இந்த வழக்கை காட்டும் பல ஆண்டுகளாக ஆற போட்டிருக்கிறது . என்ன நீதியோ என்ன நியாயமோ ?


thehindu
மே 02, 2025 16:50

டிரில்லியன் டாலர் மோசடி மன்னர்கள் எதிர்க்கட்சிகளின் மீது போர்தொடுக்கின்றன .


என்றும் இந்தியன்
மே 02, 2025 16:40

அநீதிமன்றம் என்றால் ஒரு கீழ்மையான கேளிக்கை விடுதி என்று இதனால் பொருள்படுகின்றது???எப்போ புகார்???இவ்வளவு நாள் இழுத்து இழுத்து "இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை" என்ற சிகரெட் விளம்பரம் போல நடக்கின்றது???


angbu ganesh
மே 02, 2025 16:36

நாடு கடத்தி அவனுங்க சொந்த ஊருக்கு தொரத்துங்க யுவர் ஹனோர்


சமீபத்திய செய்தி