வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அறிவார்ந்தவர்களை எல்லாம் நக்சல்கள் என ஒழித்து விட்டு பட்டங்கள் பெற்றதாக பொய் சொல்பவர்கள் எத்தனை காலம் இந்த நாட்டை ஆள்வர்.இவர்கள் அறியாமையை பயன்படுத்தி அதிகார வர்கம் நாட்டை சூறையாடுகின்றது.
நம் நாட்டின் ஒரே உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்ட நக்சல் அமைப்பினரை பிரதமர் மோடி ஒழித்து கட்டி உள்ளார். அதற்கு, காங்.,கின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். எங்கள் அரசின் அடுத்த இலக்கு, அறிவுசார் நக்சல்களை ஒழிப்பது தான்.- கிரண் ரிஜிஜூமத்திய அமைச்சர், பா.ஜ.,
டில்லியில், காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது; கடந்த, 12 ஆண்டுகளில், இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி வெறும் வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளார். இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காமல், பெயரளவு நடவடிக்கைகளையே மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. காற்று மாசில், ஏன் நாம் விஸ்வகுருவாக மாறுகிறோம்?- மல்லிகார்ஜுன கார்கேதேசிய தலைவர், காங்கிரஸ்
ராமர் கோவில் முறைகேடு சம்பவத்தால், பக்தர்கள் வேதனை அடைந்தனர். அவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கோவில் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை அமல்படுத்துவோம். உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்புகளை உருவாக்கி, அயோத்தியை, சனாதன யாத்திரையின் உலகளாவிய தலைநகராக மாற்றுவோம்.- அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி கட்சி
அறிவார்ந்தவர்களை எல்லாம் நக்சல்கள் என ஒழித்து விட்டு பட்டங்கள் பெற்றதாக பொய் சொல்பவர்கள் எத்தனை காலம் இந்த நாட்டை ஆள்வர்.இவர்கள் அறியாமையை பயன்படுத்தி அதிகார வர்கம் நாட்டை சூறையாடுகின்றது.