தேசியம் பேட்டி: கட்டளை பிறப்பிக்க முடியாது!
கட்டளை பிறப்பிக்க முடியாது!
நம் நாடு, உலகின் முதன்மை நாடாக மாற விரும்புகிறது; அவ்வாறு மாறினால், வேறு எந்த நாடும் நமக்கு கட்டளைகளைப் பிறப்பிக்க முடியாது.மற்றவர்களுக்கு உதவுவதும், அனைவரையும் அரவணைத்து செல்வதும் நம் கலாசாரத்தின் சாராம்சமாகும். இந்த இலக்கை எட்ட, நம் கல்வி நிறுவனங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.- சி.பி.ராதாகிருஷ்ணன்துணை ஜனாதிபதி
தலையிட வேண்டும்!
மஹாராஷ்டிராவின் முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரசின் முன்னாள் தலைவருமான அஜித் பவார் இறப்புக்கு காரணமான விமான விபத்து குறித்த விசாரணையை விரைப்படுத்த, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட வேண்டும். அதன் முடிவுகளை விரைவில் பொதுவெளியில் வெளியிடவும் கோரியுள்ளேன்.- தேவேந்திர பட்னவிஸ்மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,
பேச்சு தொடங்கவில்லை!
உ.பி., சட்டசபைத் தேர்தலுக்காக, ‘இண்டி’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து முறையான பேச்சுகள் இன்னும் தொடங்கவில்லை. இந்தத் தேர்தலை, நாங்கள் ஒற்றுமையுடன் எதிர்கொள்வோம். கூட்டணியின் வியூகமானது பரஸ்பர மரியாதை மற்றும் வேட்பாளர்களின் பலத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.- அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி கட்சி