உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  தேசியம்; தலைவர்கள் பேட்டி

 தேசியம்; தலைவர்கள் பேட்டி

இடையூறு இன்றி பயணம்! ஏ.ஐ., தொழில்நுட்ப கேமராக்கள் மூலம், சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணை கண்டறிந்து, தானியங்கி முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ஓராண்டில் துவங்கும். இதனால், வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் இடையூறின்றி பயணிக்கலாம். நிதின் கட்கரி மத்திய அமைச்சர், பா.ஜ.,நிஜ பொருளாதார சூழல்! அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது. இது, நம் நாட்டின் உண்மையான பொருளாதார சூழலை எடுத்துக்காட்டுகிறது. மத்திய அரசின் கொள்கைகள் சரியாக இருந்தால், ரூபாய் வீழ்ச்சி அடைந்திருக்காது. இதற்கான காரணத்தை பிரதமர் மோடி விளக்க வேண்டும். மல்லிகார்ஜுன கார்கே தலைவர், காங்கிரஸ்;பதற்றம் அடையாதீர்கள்! சபரிமலையில் மாயமான தங்கம், 'மசாலா' பத்திரம் உட்பட பல்வேறு விவகா ரங்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசி ன் சி.பி.ஐ., - என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்பினர் கேரளாவிற்கு விரைவில் வருகை தருவர். இதனால், யாரும் பதற்றம் அடைய வேண்டாம். இது, உள்ளாட்சி தேர்தல் நடைமுறையை எந்த வ கையிலும் பாதிக்காது. சுரேஷ் கோபி மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ