உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியும், டிரம்ப்பும் தேசியவாதிகள்; அமைச்சர் ஜெய்சங்கர்

பிரதமர் மோடியும், டிரம்ப்பும் தேசியவாதிகள்; அமைச்சர் ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தேசியவாதிகள் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இரு நாட்டு தலைவர்களின் உறவு குறித்து அவர் பேசியதாவது: பிரதமர் மோடி வலுவான தேசியவாதி. தற்போது, டிரம்ப் அமெரிக்க தேசியவாதியாவார். தேசியவாதிகளால் மட்டுமே இதுபோன்று ஒருவரை ஒருவர் மதித்து மரியாதை கொடுக்க முடியும். டிரம்ப்பின் இந்த 2வது ஆட்சி காலத்தில், அமெரிக்காவுக்கு வர அழைப்பு விடுக்கப்பட்ட உலக தலைவர்களில் முதன்மையானவர் பிரதமர் மோடி. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற டிரம்ப் - பிரதமர் மோடி இடையிலான பேச்சுவார்த்தை பாசிட்டிவாக இருந்தது. டிரம்ப் கொஞ்சம் அசாதாரணமானவர். உலகில் பல தலைவர்களுடன் டிரம்ப்புக்கு இருக்கும் உறவுகளை ஒப்பிடும்போது, பிரதமர் மோடியுடனான உறவு சற்று வேறுமாதிரியானது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ட்ரம்ப்சிங்
பிப் 23, 2025 08:57

என்ன இப்பிடி பம்முறாங்க.


S.L.Narasimman
பிப் 23, 2025 07:59

அமைச்சர் செய்சங்கர் சொல்வது உண்மையே. உலகத்திலேயே பெரிய சனநாயக நாடுகளின் கட்சி வேறுபாடு கலைந்து தனிப்பெரும் தலைவர்களாக உள்ளார்கள். தங்கள் நாட்டின் மக்கள் நலம், பொருளாதாரம், நாட்டின் பாதுகாப்பில் சிறிதும் விட்டுகொடுக்காத நிலைப்பாடு பெருமைக்குரியது.


Matt P
பிப் 22, 2025 23:46

வேறு எல்லோரும் காட்டுவாசிகளா?


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 22, 2025 23:46

டிரம்புக்கும் மோடிக்கும் பத்துப் பொருத்தமும் பொருந்தியுள்ளது. ஜெய்சங்கர் சொல்றது போல ஜெர்மனியின் ஹிட்லரையும் இப்படித் தான் முரட்டு தேசியவாதி என்று அன்று தலையில் வைத்து ஆடினார்கள் அந்நாட்டு மக்கள். இன்றளவும் அந்த அவமானத்தை சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.