| ADDED : செப் 09, 2026 07:43 PM
கடமையை செய்யும்! லஞ்ச புகாரில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் மீது வழக்குப் பதிவு செய்ய கேரள டி.ஜி.பி.,க்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். மத்திய முகமையில் இருந்து கடிதம் வந்துள்ளதால், இது குறித்து முடிவெடுக்கும் முன் சட்டரீதியான ஆய்வு அவசியம். சதீசன் கேரள முதல்வர், காங்கிரஸ்மிகப்பெரிய குறைபாடு! ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் தற்போதைய வடிவத்தில் ஜாதிப் பெயர்களின் பட்டியலுக்கு பதிலாக திறந்தநிலை கேள்விகளை பயன்படுத்தும் மத்திய அரசின் முடிவு மிகப்பெரிய குறைபாடு. முழு செயல்முறையும் தோல்விடைய வேண்டும் என்றே பிரதமர் மோடி விரும்புகிறார். இந்த முறையை ரத்து செய்ய வேண்டும். ஜெய்ராம் ரமேஷ் பொதுச் செயலர், காங்கிரஸ்அரசியல் வேண்டாம்! பஞ்சாபில் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து அமைச்சரிடம் புகார் செய்த நபர் தற்கொலை செய்து கொள்ள காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், சடலங்களை வைத்து அரசியல் செய்வதை காங்., மூத்த தலைவர் ராகுல் தவிர்க்க வேண்டும். பஞ்சாப் மக்கள் இதை விரும்பமாட்டார்கள். பகவந்த் மான் பஞ்சாப் முதல்வர் ஆம் ஆத்மி