தேசியம் பேட்டி
எங்களுக்கு பாடம் நடத்தலாமா?தலித் தலைவர்களை காங்., மதிப்பதில்லை என அமித் ஷா கூறியுள்ளார். காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் மோடி தொடர்ந்து அவமதித்து வருகிறார். பா.ஜ.,வின் வரலாற்றில், அக்கட்சிக்கு தலைமை வகித்த ஒரே ஒரு தலித் தலைவர் பங்காரு லஷ்மண் மட்டுமே. இவர்கள் எங்களுக்கு பாடம் நடத்தலாமா?பவன் கெராசெய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்ராகுலின் இரட்டை வேடம்!எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,யினருக்கான இடஒதுக்கீட்டில் ராகுலின் நிலைப்பாடு இரட்டை வேடமாக உள்ளது. இங்கே ஓட்டுக்காக இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்த வேண்டும் என பேசும் அவர், வெளிநாட்டுக்குச் சென்றால், இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்.மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்வளர்ச்சி பிடிக்காது!காங்கிரஸில் உள்ள ஒரு தலித் தலைவர், தன் கடின உழைப்பால் கொஞ்சம் வளர்ந்தால், அக்கட்சிக்கு அது பொறுக்காது. உடனே அவரை நசுக்க பாடுபடும். காங்கிரசின் இந்த குணம் நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். ஹரியானாவில், காங்கிரஸ் ஆட்சியில் தலித் சமூகத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.நயாப் சிங் சைனிஹரியானா முதல்வர், பா.ஜ.,