மேலும் செய்திகள்
தேச விரோதிகளுடன் தொடர்பு!
22-Oct-2026
பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சிந்தாந்தம், அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுகின்றன. தொழிலாளர்களை கொத்தடிமைகளை போல நடத்துகின்றன. ஆனால், எங்கள் கட்சி சிந்தாந்தத்தின்படி, அவர்கள் நம் நாட்டின் அடித்தளமாக உள்ளனர். அவர்களை பாதுகாக்க வேண்டும்.- ராகுல்லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில், நம் மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளை, எழுப்ப திட்டமிட்டுள்ளோம். இத்தகைய கேள்விகளை எதிர்கொள்ள மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. எங்களின் கேள்விகளுக்கு அவர்களிடம் உரிய பதில் இல்லை என சந்தேகிக்கிறோம்; எனவே, மத்திய அரசு இந்த கூட்டத்தொடரை நடத்த விரும்பவில்லை.- கவுரவ் கோகோய்லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
தெலுங்கானாவின் ஹைதராபாதில் நடக்கும், பாரத் உச்சி மாநாட்டில் அமெரிக்க தொழிலதிபர் ஆதரவு பெற்ற வெளிநாட்டு பிரமுகர்கள் பங்கேற்றது குறித்து காங்., எம்.பி., ராகுல் மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். நம் நாட்டிற்கு எதிரான கருத்துகளைப் பரப்ப, சர்வதேச மேடையாக இந்த மாநாட்டை அக்கட்சி பயன்படுத்துகிறதா?- சுதான்ஷு திரிவேதிசெய்தித்தொடர்பாளர், பா.ஜ.,
22-Oct-2026