உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி: அக். 28

தேசியம் பேட்டி: அக். 28

சீர்குலைக்க சதி!

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி, நவ., 1ல், ‘இண்டி’ கூட்டணி நடத்த உள்ள போராட்டத்தை சீர்குலைக்க, டில்லி போலீசாருக்கு மத்திய பா.ஜ., அரசு அழுத்தம் கொடுக்கிறது. உரிய அனுமதி பெற்றும் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய விடாமல் போலீசார் தடுக்கின்றனர்.- கே.சி.வேணுகோபால்பொதுச்செயலர், காங்கிரஸ்

மக்களின் நம்பிக்கை!

மத்தியில் காங்., ஆட்சியில் இருந்த போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது, அவை சிறப்பாக செயல்பட்டன. தற்போது, அக்கட்சி தோல்வி அடைந்ததால் குற்றஞ்சாட்டுகிறது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றஞ்சாட்டுவதை விடுத்து, மக்களின் நம்பிக்கையை பெற காங்., முயற்சிக்க வேண்டும்.- சந்திரபாபு நாயுடுஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம் கட்சி

தேர்தல் சிண்டிகேட்!

பா.ஜ., தேர்தல் கமிஷன் மற்றும் நிர்வாக அதிகாரிகள் இணைந்து தேர்தல் மோசடியில் ஈடுபடுகின்றனர். தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியலில், முறைகேடு; தேர்தலின் போது கள்ள ஓட்டை பதிவு செய்வது; ஓட்டு எண்ணிக்கை முடிவுகளில் முறைகேடு செய்வதில், பா.ஜ., ஒரு ‘தேர்தல் சிண்டிகேட்’ போல் செயல்படுகிறது.- அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி