| ADDED : பிப் 01, 2024 12:49 AM
கைதேர்ந்தவர்கள்!பா.ஜ., எதிர்க்கட்சியாக இருந்தபோது தான், பார்லிமென்டில் அதிக முறை அமளி, கூச்சல், குழப்பம் போன்ற சம்பவங்கள் அரங்கேறின. பார்லி.,யை முடக்குவதில் அக்கட்சியினர் கைதேர்ந்தவர்கள். பா.ஜ., தற்போது, ஜனநாயகத்தையும் சீர்குலைக்கிறது.மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்கிரஸ்முட்டாள்தனமானது!காங்கிரசின் அழுத்தத்தால் தான், பீஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என ராகுல் கூறுவது முட்டாள்தனமானது. அந்த முயற்சியை நான் தான் எடுத்தேன் என்பது, மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.நிதீஷ் குமார்பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்ஒருதலைபட்சமானது!பார்லிமென்டில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரை, தேர்தல் பேச்சு போல இருந்தது. பா.ஜ., எழுதிக் கொடுத்ததை அவர் வாசித்திருக்கிறார். பல முக்கிய விவகாரங்களை விட்டு விட்டு ஒருதலைபட்சமாக ஜனாதிபதியின் உரை உள்ளது.சசி தரூர்லோக்சபா எம்.பி., காங்கிரஸ்