| ADDED : மார் 07, 2024 11:37 AM
முடியாததை முயற்சிக்காதீர்!நேரு குடும்ப வாரிசான ராகுல், தொடர்ந்து தோல்விகளையே சந்திக்கிறார். அவரை அரசியலில் நிலைநிறுத்த காங்கிரஸ் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துஉள்ளன. ராகுல், தன்னால் முடியாத ஒன்றை முயற்சித்து கட்சியினரின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.கிரண் ரிஜிஜுமத்திய அமைச்சர், பா.ஜ.,பெண்ணாக இருப்பது குற்றமா?உ.பி.,யில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி கேட்டால், அவர்களது குடும்பங்களை அழிப்பது வழக்கமாகி விட்டது. உன்னாவ் சம்பவத்தில் இருந்து, சமீபத்தில் கான்பூரில் பலாத்காரத்துக்கு ஆளான இரண்டு சிறுமியர் தற்கொலை வரை இது தொடர்கிறது.பிரியங்காபொதுச் செயலர், காங்.,புரளியை பரப்ப வேண்டாம்!சந்தேஷ்காலி குறித்தும், மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், பா.ஜ., தலைவர்கள் புரளியை பரப்பி வருகின்றனர். அதுவே பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு கொடுமை நடந்தால் அமைதிகாக்கின்றனர்.மம்தா பானர்ஜிமே.வங்க முதல்வர்,திரிணமுல் காங்.,