உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திசைதிருப்பும் செயல்!

திசைதிருப்பும் செயல்!

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இதுவரை பிடிபடாமல் இருக்கின்றனர். அதே நேரத்தில் மத்திய அரசு அனைத்து கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்களை வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பி உள்ளது. பிரதமர் மோடி இந்த விஷயத்தில் திசைதிருப்பும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்

பாக்.,கிற்கு இது போதாது!

நம் நாகரிக வரலாற்றில் மிகவும் கொடூரமான சம்பவங்களில் ஒன்று பஹல்காமில் நடந்த படுகொலைகள். இதை செய்ததன் வாயிலாக பாகிஸ்தான் மோதலை துவங்கி வைத்தது. அவர்களை அடித்தது போதாது; மேலும் கடுமையாக தாக்கிஇருக்க வேண்டும்.சுப்ரமணியன் சுவாமி, மூத்த தலைவர், பா.ஜ.,

அவமானப்படுத்துகிறீர்!

ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை உலக நாடுகளுக்கு விளக்கி கூற, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட எம்.பி.,க்கள் குழுக்களில் ஒன்றை வழி நடத்தும் பொறுப்பு காங்கிரஸ் எம்.பி., சசி தரூருக்கு வழங்கப்பட்டது. அந்த பொறுப்பில் இருந்து அவர் பெயரை கட்சி நீக்கியது, அவரை அவமானப்படுத்தும் செயல்.சுதாகரன், முன்னாள் கேரள மாநில தலைவர்,காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை