உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிப்பட்ட அரசியல்!

வெளிப்பட்ட அரசியல்!

பிரதமர் மோடியின் சமூக வலைதள பதிவு வாயிலாக, துணை ஜனாதிபதி ராஜினாமாவில் அரசியல் வெளிப்பட்டுள்ளது. அவரது பதவிக்காலம் முடியும் முன் ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளார். அரசியலமைப்பு பதவி வகிப் பவரிடம் மோடியும், அமித் ஷாவும் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்கு இதுவே சான்று. கவுரவ் கோகோய் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

அரசுக்கே பலன்!

பார்லிமென்ட் கூட்டத் தொடர் இரு நாட்களாக முடக்கப்பட்டன. இதனால் மத்திய அரசுக்கு தான் பலன். பார்லிமென்ட் செயல்பட அரசு பொறுப்பேற்க வேண்டும். கேள்வி நேரம் , ஜீரோ நேரங்களின் அவகாசத்தை குறைத்து, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆக்கப்பூர்வ விவாதங்களை நடத்த வேண்டும் . டெரெக் ஓ பிரையன், ராஜ்யசபா எம்.பி., திரிணமுல் காங்கிரஸ்

மொழி வெறுப்பை தவிருங்கள்!

நீங்கள் என்னை அடித்தால், நான் உடனே மராத்தியில் பேச முடியுமா? அத்தகைய வெறுப்பு பரவினால், மஹாராஷ்டிராவிற்கு முதலீடுகள் வராது. வெறுப்புணர்வை தவிருங்கள். எனக்கு ஹிந்தி தெரியாதது, எனக்கு தடையாக உள்ளது. பல மொழிகளை கற்பதுடன், தாய்மொழியால் பெருமைப்பட வேண்டும். சி.பி.ராதாகிருஷ்ணன் மஹாராஷ்டிரா கவர்னர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை