தேசியம் பேட்டி: மாற முடியாது!
மாற முடியாது!
நரி, தன் உடலில் கோடுகளை வரைந்து புலியாக மாற முயற்சிப்பது போல், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ், தாடி வளர்த்தால் மட்டும் ரேவந்த் ரெட்டி ஆக முடியாது. வெறும் நகலெடுக்கும் செயல்களால், மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது. உண்மையான மாற்றம் ஏற்படாதவரை அவர்களின் ஆதரவை பெற முடியாது.- ரேவந்த் ரெட்டிதெலுங்கானா முதல்வர், காங்கிரஸ்
திசை திருப்பும் செயல்!
தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போலி வாக்குறுதிகளை அளித்து, மக்களை நம்ப வைத்து, ஆட்சியைக் கைப்பற்றிய காங்., கட்சி, கொள்ளையடிப்பது, சுரண்டுவது உள்ளிட்ட செயல்களை மட்டுமே மேற்கொள்கிறது. அக்கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தன் மோசடிகளை மறைக்க, குழப்பமான சூழலை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயலில் ஈடுபடுகிறார்.- ராஜீவ் சந்திரசேகர்தலைவர், கேரள பா.ஜ.,
ஏன் இவ்வளவு கவலை?
மத நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் கோவில் என்பது ஒரு நம்பிக்கைக்குரிய இடமாகும். கோவில் என்பது மக்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த செல்லும் ஒரு குறியீடு மட்டுமே. எங்கள் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதால், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு என்ன பிரச்னை? அவரது வருகையைக் கண்டு அவர் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்?- ராம் கோபால் யாதவ்ராஜ்யசபா எம்.பி., சமாஜ்வாதி கட்சி