உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அறிவியல் முன்னேற்றத்தால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியம்: முதல்வர்

அறிவியல் முன்னேற்றத்தால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியம்: முதல்வர்

பெங்களூரு: ''அறிவியல் முன்னேற்றத்தால் மட்டுமே, நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில், பெங்களூரின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஜெ.என்.டாடா ஆடிட்டோரியத்தில், விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு விஸ்வேஸ்வரய்யா, ராஜா ராமண்ணா, சி.வி.ராமன், பேராசிரியர் சதீஷ் தவான், கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்கப்பட்டது.விருது வழங்கி, முதல்வர் சித்தராமையா பேசியதாவது:கர்நாடக மாநிலம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் 'நம்பர் ஒன்' இடத்தில் உள்ளது. இந்த அறிவியல் தொழில்நுட்பத்தின் பலன், மக்களுக்கு கிடைக்க வேண்டும். அறிவியல் முன்னேற்றத்தால் மட்டுமே, நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகும்.

இளம் தலைமுறை

விருது பெற்றுள்ள விஞ்ஞானிகள், இன்றைய இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டிகள் ஆவர். இவர்களின் சாதனை, அறிவியல், தொழில்நுட்பத்தில் இளம் தலைமுறையினர் அதிக ஆர்வத்தை வளர்த்து கொள்ள உதவியாக இருக்கும்.பெங்களூரு 'சிலிகான் வேலி ஆப் இந்தியா' என, பிரசித்தி பெற்றதன் பின்னணியில், பல விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்களின் உழைப்பு உள்ளது. விஞ்ஞானிகள் எண்ணிக்கை அதிகரிப்பது, நாட்டின் முன்னேற்றத்துக்கு நல்லது.சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு சரியாக வேண்டுமானால் அனைத்து ஜாதி, சமுதாயத்தினருக்கு சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். கிராமப்பகுதியின் பலர், விஞ்ஞானிகளாக விருது பெற்றிருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும். திறமை என்பது வம்சாவழியாக வருவது அல்ல. வாய்ப்பு மற்றும் நிரந்தர உழைப்பால் மட்டுமே, திறமை வளரும். திறமைசாலிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் போசராஜு பேசுகையில், ''கர்நாடகாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது, எங்கள் துறையின் நோக்கமாகும். ¡மாநில வளர்ச்சிக்கு தகுந்த, குறிப்பாக விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பம் அடிப்படையிலான திட்டங்கள் வகுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ