மேலும் செய்திகள்
குட்டீஸ்கள் விரும்பும் மாம்பழ ரசகுல்லா
21-Jun-2025
இதுவரை பல வகையான சட்னியை தொட்டு சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், பலரும் அறிந்திராத, மருத்துவகுணமிக்க சட்னியை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா... புற்றுநோயை தடுக்கும் சக்தி கொண்ட நாவல்பழத்தை வைத்து எப்படி சட்னி செய்வது என்பதை எளிமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். செய்முறை
முதலில் நாவல்பழத்தை உப்பு கலந்த தண்ணீரில் போட்டு நன்கு கழுவி கொள்ள வேண்டும். அதை கத்தியால் கீறி சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ளவும்.இந்த சதை பகுதிகளை மிக்ஸியில் போடவும். இதனுடன், பூண்டு, தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சை சாறு, புளி சேர்க்கவும்.இவை அனைத்தையும் சட்னி பதத்திற்கு நன்கு அரைத்து கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும். இதில், தாளிப்பை ஊற்றி கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான நாவல்பழம் சட்னி தயார்.இந்த சட்னி மருத்துவகுணம் கொண்டது. அதே சமயம் சட்னி ஊதா நிறத்தில் இருப்பதால், குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும்.இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். - நமது நிருபர் -
21-Jun-2025