உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால்...: கடற்படை எச்சரிக்கை

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால்...: கடற்படை எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், நாம் என்ன செய்வோம் என்பது அந்நாட்டிற்கு தெரியும்,'' என இந்திய கடற்படை எச்சரித்து உள்ளது.பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவம் மற்றும் விமானப்படை, கடற்படை டி.ஜி.எம்.ஓ.,க்கள் இன்று (மே 11) பேட்டி அளித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kvfl6mal&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏன் பிரமோத் கூறியதாவது: பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பிறகு, இந்திய கடற்படையின் போர் குழுக்கள், தரை படை குழுக்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் கடற்படையின் படைகள் அனைத்தும், தயார் நிலையில் அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டது. தாக்குதல் நடந்த 96 மணி நேரத்திற்குள் அரபிக்கடலில், பயிற்சியும் நடந்தது.இதனால், பாகிஸ்தானின் கடற்படை மற்றும் வான்படைகள், பாதுகாப்பு நிலைப்பாட்டையே எடுக்க முடிந்தது. கராச்சி உள்ளிட்ட பாகிஸ்தானின் நிலம், கடல் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தும் வகையில் நமது கடற்படை அரபிக்கடலின் வடக்குப்பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த முறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் , நாம் என்ன செய்வோம் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
மே 12, 2025 09:19

1971 போர் நடந்த நேரத்தில் EXTERNAL எமெர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டு அரசுக்கும் ராணுவத்துக்கும் எதிராக செய்தி பரப்புபவர்களை FIR இல்லாமல் கைது செய்து சிறையில் தள்ளினர். இப்போது அதீதமான கருத்துரிமை ஆபத்து.


Pandianpillai Pandi
மே 12, 2025 08:44

சீனாவை எதிர்கொள்கிற அளவிற்கு கடற்படை வலுவானதாக இல்லை. நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் அவர்கள் கூறியது போல் தரை படை வான் படை நன்றாக உள்ளது . கடற்படையை வலுவடைய செய்வதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று எண்ணி அதிக நிதியை கடற்படைக்கு ஒதுக்கினார். அதன் பலன் தற்போது பாகிஸ்தானை நடுங்க செய்திருக்கிறது. கடற்படைக்கு நீர்மூழ்கி கப்பல்கள் அதிக அளவு தேவை. நமக்கு கடற்பரப்புகள் கட்டுக்கள் வைப்பது மிகவும் அவசியம். அதிக நிதியை கடற்படைக்கு ஒதுக்க வேண்டும் .


Kasimani Baskaran
மே 12, 2025 06:20

முக்கியமான விமானதளங்கள் மற்றும் வி ஐ பி கள் பதுங்கி இருந்த இடங்களையே உடைத்து இருக்கிறார்கள்...


xyzabc
மே 12, 2025 02:14

Sir, please do not tolerate any simple infiltration by the terrorists. Everything should be accoun. It should be part of the ceasefire agreement. that is the only way, these dogs can be tamed. jai hind.


theindian
மே 12, 2025 00:50

பாகிஸ்தானை சீண்டினால் சீனாவும் வரும் அமெரிக்காவும் அவர்களுக்கு ஆதரவாக வரும் . ஒருசில அரசியல்வாதிகளின் ஏவலில் வேலை செய்யும் இவர்கள் கிழிப்பார்களா ? இவர்களோடு சேர்ந்து அழியப்போவது நாடும் நாட்டுமக்களும்தான்


theindian
மே 12, 2025 00:46

மக்களின் ரத்தம் சிந்தி உழைத்த பணம் லச்சக்கணக்கான கோடிகளின் மீது உட்க்கார்ந்து கொண்டு ஒரு சிலருக்கு அரசியல் ஏஜெண்டு வேலை செய்வதை விட்டுவிட்டு, உருப்படியான வேலை எதையாவது செய்யவேண்டும் .


Patriot
மே 12, 2025 07:46

pls note you are passing comments against the Military of this country...it will be considered as war crime and you can be arrested


krishna
மே 11, 2025 23:07

super approach . Jai hind.


Venkat V
மே 11, 2025 23:03

Proud moments, Royal salute to Indian military. Jai hind


சமீபத்திய செய்தி