உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

*ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுட்டரில் நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். போலீஸ் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார்.சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான அபுஜ்மாத் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினருக்கு இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலை முதல் இன்று வரை, நக்சலைட்டுகளுக்கு, பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y9auxruv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.ரக 47 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தெரிகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
ஜன 05, 2025 19:22

சீனாவுக்காக உழைப்பவர்கள் பலர் ......... திமுக, காங்கிரஸ், நக்சலைட்டுகள், இங்கே கதறும் கொத்தடிமைகள் ....


அப்பாவி
ஜன 05, 2025 18:50

அடுத்த 25 வருஷத்துக்குள் ஒழித்து விடுவோம் ஹை.அப்பவும்.முடியலேன்னா அதுக்கடுத்த 25 வருஷம் இருக்கவே இருக்கு ஹை.


Laddoo
ஜன 05, 2025 17:35

இவர்களால் நாட்டுக்கு நன்மையில்லை . பொசுக்கி தள்ளுங்கள்


Ramesh Sargam
ஜன 05, 2025 12:31

நாட்டின் பல மாநிலங்களில் வெள்ளை வேஷ்டி, வெள்ளை கதர் சட்டை அணிந்து தில்லாக உலாவரும் அரசியல் நக்ஸலைட்டுகளை என்று .................... செய்வீர்கள்?


Murali subramanian
ஜன 05, 2025 11:11

குட் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை