உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானாவில் 13 அமைச்சர்களுடன் முதல்வராக சைனி பதவியேற்பு

ஹரியானாவில் 13 அமைச்சர்களுடன் முதல்வராக சைனி பதவியேற்பு

சண்டிகர் : ஹரியானா முதல்வராக, பா.ஜ.,வின் நயாப் சிங் சைனி, 54, இரண்டாவது முறையாக நேற்று பதவி ஏற்றார். அவருடன் இரு பெண்கள் உட்பட 13 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர். ஹரியானா சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ., 48 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது. ஹிசார் எம்.எல்.ஏ., சாவித்திரி ஜிண்டால் உட்பட மூன்று சுயேச்சைகள் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.தேர்தலில் வெற்றி பெற்றால், நயாப் சிங் சைனி முதல்வராக தொடர்வார் என, பா.ஜ., தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, பா.ஜ., சட்டசபை தலைவராக நயாப் சிங் சைனி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தசரா மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சைனிக்கும், அமைச்சர்களுக்கும் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானா சட்டசபையில், முதல்வரையும் சேர்த்து 14 பேர் அமைச்சர்களாக பதவி வகிக்கலாம்.விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நட்டா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றனர். பதவி ஏற்ற பின், முதல்வர் சைனி செய்தியாளர்களிடம் கூறியதாவது:மோடி அரசின் கொள்கைகள் மீது ஹரியானா மக்கள் நம்பிக்கை வைத்து மீண்டும் வெற்றி பெற செய்துள்ளனர். கடந்த 2014, 2019ல் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினோம். இந்த முறை அளித்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு சைனி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

என்றும் இந்தியன்
அக் 18, 2024 16:16

4 நாட்களுக்கு முன்பு வரை இன்டர்நெட்டில் - You Tube வீடியோவில் ஹரியானாவில் 30 சட்டசபை வெற்றி செல்லாது என்று Election Commission மறு EVM கூட்டுதலுக்கு சொல்லியுள்ளது ஆகவே பதவிஏற்பு இல்லை என்று Fake News வந்துகொண்டே இருந்தது இரண்டு ஆள் முன்பு தான் அது நின்று விட்டது


கிஜன்
அக் 18, 2024 09:59

வாழ்த்துக்கள் ....


Kasimani Baskaran
அக் 18, 2024 05:58

மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்தால் இன்னும் பல முறை கூட ஆட்சியை தக்கவைக்க முடியும்.


RAMAKRISHNAN NATESAN
அக் 18, 2024 04:59

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை நினைத்துப்பார்க்க வேண்டும் ......


முக்கிய வீடியோ