உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதியை மறைத்து மீதியை வெளியிட்டது ஏன்: தேசிய மகளிர் ஆணையம் கேரளாவுக்கு கிடுக்கிப்பிடி!

பாதியை மறைத்து மீதியை வெளியிட்டது ஏன்: தேசிய மகளிர் ஆணையம் கேரளாவுக்கு கிடுக்கிப்பிடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்; ஹேமா கமிஷன் அறிக்கையின் வெளியிடப்படாத முழு வடிவத்தையும் ஒரு வாரத்திற்குள் அளிக்குமாறு கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

திரையுலகில் புயல்

ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமாவின் அறிக்கை கேரள திரையுலகில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. பெண் கலைஞர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருவதாக அண்மையில் வெளியானஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

நடிகர்கள் மீது புகார்

தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் வெளியிடப்பட்ட அறிக்கை கேரள திரையுலகை புரட்டிபோட்டுள்ளது. மலையாள பட இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ, சித்திக் என பல பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. நடிகர் சங்க பதவியில் இருந்து மோகன்லால் உள்ளிட்ட பலர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்தனர்.அறிக்கையும், அதையொட்டி கிளம்பிய ஆவேசமும் அளித்த தைரியம் காரணமாக, பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் முன்வந்து புகார் அளிக்க தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு திரையுலகிலும், வெளியிலும் ஆதரவுக்குரல்கள் அதிகரித்துள்ளன. குற்றச்சாட்டுக்கு ஆளான மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., நடிகர் முகேஷ், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சியே கூறும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது.

முழு வடிவம் வேண்டும்

இந்நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவத்தையும் அளிக்குமாறு கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. பாதியை மறைத்து மீதியை மட்டும் வெளியிட்டதற்கும் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நெருக்கடி

இதனால் ஹேமா அறிக்கையில் மறைக்கப்பட்ட மற்ற விவரங்களும் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. தேசிய மகளிர் ஆணையத்தின் இந்த உத்தரவால் முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ram pollachi
செப் 01, 2024 17:33

சினிமா முதல் சின்னத்திரை வரை ஆபாசம், இரட்டை அர்த்தங்கள் கொட்டி கிடக்குது... சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை அந்த பெண்கள் மீது தேசிய மகளீர் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது? இவ்வளவு நடந்தும் சினிமாவை தடை செய்ய முடியுமா? கருப்பு வெள்ளை படத்தை கலர் படமாக்கி எல்லோரையும் கவுத்துபுட்டாங்கோ!


saravanan samy
செப் 01, 2024 12:47

சகோதர மனப்பான்மையுடன் சிந்தித்து பேசவும் உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இப்படி நடந்திருந்தால் இது போல் பேசுவீர்களா


N.Purushothaman
செப் 01, 2024 12:32

கூத்தாடிங்களை அவர்களை வைக்கும் இடத்தில வைக்காமல் அரசு அவர்களிடம் கொஞ்சி குலாவினால் இப்படித்தான் நடக்கும் ....தமிழ்திரையுலகம் கூட பல ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது ....


RAMAKRISHNAN NATESAN
செப் 01, 2024 12:07

டாக்டர் அபயா விவகாரத்தில் இதே போன்ற கிடுக்கிப்பிடி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஏன் மேற்குவங்கத்தின் மீது போட முடியவில்லை ???? எதிர்கால கூட்டணி கணக்குகள் காரணமா ????


Kanns
செப் 01, 2024 11:56

False Complaints Increased As Case-Hungry Criminals, NewsHungry Media, VoteHungry Criminals Never Punish Vested False Complainant Gangsters women, SCs, unions/groups, advocates Etc. Sack & Punish Judges Not Punishing them, Power Misusing Rulers, their Biased Officials esp police, judges, Media &


jayvee
செப் 01, 2024 10:55

இந்தியாவின் வியாதிகளின் நுழைவுவாயில் கேரளா.. எய்ட்ஸ் கரோனா ஜிர்கா என்று உலகில் எங்கு ஒரு வியாதி தோன்றினாலும் அதன் முதல் இந்திய வாசல் கேரளாதான்.. அதேபோல மலையளப்படங்கள் என்றால் அந்த மாதிரி படங்களுக்கும் பேமஸ் என்று இந்தியாவே அறியும். கம்யூனிசம் என்ற போர்வையில் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிய கேரளாவின் இன்றிய நிலைமை இதுதான் ..


வைகுண்டேஸ்வரன்
செப் 01, 2024 10:09

சினிமா வாய்ப்புக்காகவும் பணத்துக்காகவும் அட்ஜெஸ்ட் செய்து கொண்ட பெண்களே மூடிக்கிட்டு இருக்காங்க. மத்தவர்கள் ஏன் கதறுகிறார்கள்? செக்ஸ் புக் படிக்க ஆசை இருந்தால் படிங்க. இணையத்திலேயே நிறைய இருக்கு. எதுக்கு ஹேமா கமிஷன் அறிக்கை படிக்கணும்?


சமூக நல விரும்பி
செப் 01, 2024 09:45

கேரளா மற்றும் வெஸ்ட் பெங்கால் அரசுகளை கலைக்க வேண்டும்


Svs Yaadum oore
செப் 01, 2024 09:17

இது ஒரு மாநிலமா இது ??...இதில் படித்து முன்னேறிய மாநிலமாம் ....தடையில்லாத மதம் மாற்றம் செய்து மாட்டுக்கறி விற்பனை செய்தால் இப்படித்தான் ஒரு மாநிலம் உருப்படாமல் போகும் ...உலகத்தில் நோய் தொற்று வந்தால் அது முதலில் கேரளாவுக்குத்தான் வரும் ....இந்தியாவிலேயே அதிக தற்கொலை விகிதங்களைக் கொண்ட முதல் மாநிலம் கேரளா ....அதற்கு அடுத்து தமிழ் நாடு ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை