உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூமியை நெருங்கி வரும் எரிகல்: உன்னிப்பாக கவனிக்கும் இஸ்ரோ

பூமியை நெருங்கி வரும் எரிகல்: உன்னிப்பாக கவனிக்கும் இஸ்ரோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அளவில் பெரிய எரிகல் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக கூறியுள்ள இஸ்ரோ, அதனை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது. இந்த விண்கல் 2029ம் ஆண்டு ஏப்.,13ல் பூமிக்கு அருகில் வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.விண்வெளியில் அவ்வபோது சில எரிகற்கள் பூமியை சுற்றி வருகின்றன. அவற்றில் சில பூமியை தாண்டி செல்லும். ஒரு சில ஆபத்தை ஏற்படுத்தாமல் விலகி செல்லும். இதனை கண்காணித்து வரும் விஞ்ஞானிகள், அது எப்போது தாக்கும் என எச்சரித்து வருகின்றனர்.அந்த வகையில் 2004ம் ஆண்டு அபோபிஸ் என்ற எரிகல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அப்போது, இந்த எரிகல் பூமிக்கு அருகில் வந்தது. இது இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா மற்றும் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தை விட பெரியது. 350 முதல் 450 மீ., விட்டம் கொண்டது இந்த விண்கல். 140 மீ., விட்டத்திற்கு மேல் உள்ள எந்த விண்கல்லும் ஆபத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.எகிப்திய கடவுளான அபோபிசை நினைவு கூறும் வகையில் அவரது பெயர் இந்த விண்கல்லுக்கு சூட்டப்பட்டது. இது 2029ம் ஆண்டும், அதற்கு பிறகு 2036ம் ஆண்டும் பூமிக்கு அருகில் வரும் என விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். அப்போது பூமிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியில் இருந்து 32 ஆயிரம் கி.மீ., உயரத்தில் இந்த எரிகல் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், '300 மீ., விட்டத்திற்கு மேல் உள்ள எந்த விண்கல்லும் நிச்சயம் பூமிக்கு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஒரு மிகப்பெரிய எரிகல் மோதினால் மனித இனத்திற்கு நிச்சயம் அபாயத்தை உண்டாக்கும். இந்த எரிகல்லை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்க இஸ்ரோ அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைக்க தயாராக உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

God yes Godyes
செப் 10, 2024 22:22

பிசாத் 300 மீட்ட்ரா .அதன் பருமன் 600 மீட்டரா இருக்கலாம் இமயமே விண் கல் போல் வந்து பூமியை தாக்கினாலும் பூமியை ஒன்றும் செய்யமுடியாது


Velan Iyengaar
செப் 10, 2024 14:50

இத நம்ம ஆளுகிட்ட சொல்லுங்க ... பிராம்டரை கொண்டு அதை அடித்து நொறுக்கிவிடலாம் என்று அறிவுரை சொல்லுவார் ஓசோன் லேயர் குறித்து அவர் பேசியது காதை இன்னும் குடைந்துகொண்டு இருக்கு .....


N.Purushothaman
செப் 10, 2024 13:30

ராவுலோட பேச்சை கேட்டால் எரிகல் என்ன ?பூமிக்கு மேல் ஆகாயத்தில் இருக்குற அனைத்தும் பூமியை நோக்கி வரும் ....


Velan Iyengaar
செப் 10, 2024 14:50

உனுக்கு இன்னிக்கி ஓவர்டைம் போல ...


சமீபத்திய செய்தி