UPDATED : பிப் 04, 2024 10:37 AM | ADDED : பிப் 03, 2024 01:51 PM
மும்பை: ‛‛ஆறுகளை சுத்தம் செய்யும் ரோபோக்களே தற்போதைய தேவை'' என பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழும தலைவருமான ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். மேலும், ஆற்றை சுத்தம் செய்யும் ரோபோ ஒன்றின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளையும், புதுமையான கண்டுபிடிப்புகளையும் பதிவிடுவது வழக்கம்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vnvtdggz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், எக்ஸ் சமூக வலைதளத்தில், ஆற்றில் உள்ள குப்பைகளை ரோபோ ஒன்று தனியாக சுத்தம் செய்யும் வீடியோ ஒன்றை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில், ‛‛ ஆறுகளை சுத்தம் செய்யும் தனி ரோபோ. பார்க்க சீனா போல் தெரிகிறது? நம் நாட்டுக்கு இதுபோன்ற ரோபோக்கள் தேவை. இது போன்ற ரோபோக்களை தற்போதே உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும். இது போன்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து முதலீடு செய்ய தயாராக உள்ளேன்'' இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.