உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் மறுதேர்வுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

நீட் மறுதேர்வுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீட் நுழைவுத் தேர்வின் போது அனைத்து பகுதிகளிலும் கேள்வித்தாள் கசிந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம், மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனக் கூறியுள்ளது.இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், வினாத்தாள் லீக் ஆனது உட்பட பல மோசடிகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான, 40க்கும் மேற்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cxnl2yuu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று(ஜூலை 23) நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வுக்கு முன் வினாத்தாள் கசிந்தது உண்மை தான். பாட்னா மற்றும் ஹசாரிபாக் மையங்களில் வினாத்தாள் கசிந்ததால் 155 மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டது என்பதற்கு போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. சர்ச்சைக்குரிய 19 வது கேள்விக்கு 4வது விடை தான் சரி என நிபுணர்கள் குழு அறிக்கை அளித்து உள்ளது.சென்னை ஐஐடி அளித்த அறிக்கையை ஆய்வு செய்துள்ளோம். நீட் தேர்வு முறையில் விதிமீறல் நடந்தது. ஆனால், தேர்வு கட்டமைப்பில் பெரியளவு மோசடி நடக்கவில்லை. நாடு முழுவதும் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது என்பதற்கான ஆதாரங்களும், ரத்து செய்யும் அளவுக்கு போதிய விவரங்களும் இல்லை. மறு தேர்வு நடத்துவது என்பது 24 லட்சம் மாணவர்களை பாதிக்கும். 2 இடங்களில் மட்டும் வினாத்தாள் கசிந்துள்ளதால் மறு தேர்வு அவசியமில்லை. மறு தேர்வு நடத்த உத்தர விட முடியாது. தவறு செய்த மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ramaswamy svr
ஜூலை 24, 2024 06:47

முதலில் இந்த வழக்கே ஒரு மோசடி. நாட்டின் துர்பாக்கியம். வேலையில்லா சோம்பேறிகள் அரங்கேற்றிய நாடகம். இதில் வெளி நாட்டு துரோகிகள் கொடுத்த நிதியுதவி முக்கிய பங்கு. துர்பாக்கியமாக மாணவர்கள் பலி


sankaranarayanan
ஜூலை 24, 2024 02:27

அடி செம அடி இனி அப்பாவும் புள்ளையாண்டானும் சர்வதேச நீதி மன்றத்திற்கு செல்வார்களா?


amuthan
ஜூலை 23, 2024 21:29

நாட்டில் நீதி செத்து விட்டது. நான் 3 நாள் விவாதம் முழுவதும் பார்த்தேன். மறு தேர்வு வேண்டும் என்று வக்கீல் மிகவும் அருமை யாக வாதிட்டார். 2015 ல் 44 பேருக்கு வினா தாள் கிடைத்தற்கு மறு தேர்வு நடத்த கூறிய நிதி மன்றம் இன்று 155 பேருக்கு கிடைத்ததை உறுதி செய்த பின்னும் மறு தேர்வு நடத்த மறுப்பது ஏன்.


ஆரூர் ரங்
ஜூலை 23, 2024 20:13

எனக்கென்னவோ இந்த கசிவின் பின்னணியில் திருட்டு முன்னேற்றக் கழகம் உள்ளது என தோன்றுகிறது. இதை சாக்காக வைத்து நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வைக்கலாம் என்ற பேராசைதான்.


Swaminathan L
ஜூலை 23, 2024 19:46

நீட் தேர்வில் தில்லுமுல்லு, மோசடிகள் நடந்துள்ளது நாடு முழுவதும் அல்ல, ஓரிரு இடங்களில் மட்டுமே என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து, மறுதேர்வு அவசியம் இல்லை என்று உத்தரவிட்டிருப்பது சரியே. இதில் மாணவ, மாணவியரை வைத்து அரசியல் செய்ததும், நீட் தேர்வையே தலை முழுக வேண்டும் என்று பிரசாரம் செய்ததும் வீணாயிற்று. இனிமேலாவது, தில்லுமுல்லு, மோசடிகளுக்கு இடந்தராமல் நீட் தேர்வுகள் நீட்டாக நடத்தப்பட வேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜூலை 23, 2024 19:29

நீட் நன்றாக செயல்பட்டு வந்துள்ளது என்று சுப்ரிம் கோர்ட் சொல்லிவிட்டது. இனி யாராவது அவதூறு பரப்பினால், பத்தாண்டுகள் ஜெயில் தண்டனை தான்.


பெரிய குத்தூசி
ஜூலை 23, 2024 19:17

வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முகமையின் தவறுகள் ஒவொரு நிலையிலும் எதிர்தரப்பால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறியுள்ளார். மாணவர்களின் நலன் காக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி க்கு இன்னும் 4 மாதங்களே பதவிக்காலம் உள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்தால் ஓய்வுக்கு பின் பசையுள்ள வாரிய பதவியை பெறலாம் என ஆசையாக இருக்குமோ


bgm
ஜூலை 23, 2024 19:07

எங்க 200 வூ ஃபீஸ் யாரும் காணோம். வாங்க வந்து முட்டு குடுங்க


J.Isaac
ஜூலை 23, 2024 17:48

பல நாள் திருடன், ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்ப , பல வருடங்கள் நடந்த இந்த திருட்டு இந்த வருடம் வெளிவந்துள்ளது. இதில் ஒரு பெரிய மாபியா குரூப் செயல்ப்பட்டிருக்கும். பங்கு போடுவதில் தகராறு வந்திருக்கும். பாதிக்கப்பட்டவன் எவனோ நாரதர் வேலை செய்துள்ளார்.


rama adhavan
ஜூலை 23, 2024 20:59

அப்போ மணல் திருட்டு, குவாரி கல் திருட்டு, டாஸ்மாக் 10 ₹ கொள்ளை?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி