உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாளை வெளியாகிறது நீட் ரிசல்ட்!

நாளை வெளியாகிறது நீட் ரிசல்ட்!

புதுடில்லி,'நீட் தேர்வின் முடிவுகளை நகரம் வாரியாக, தேர்வு மையம் வாரியாக, மாணவர்களின் பெயர்கள் இன்றி, சனிக்கிழமையான நாளை மதியம் 12:00 மணிக்குள் வெளியிட வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட், கடந்த மே 5ம் தேதி நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c5sptmg1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வெளிநாடுகளில் 14 இடங்கள் உட்பட நம் நாட்டில் 571 நகரங்களில், 4,750 மையங்களில் தேர்வு நடந்தது. இதை, 23.33 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவு, ஜூன் 4ம் தேதி வெளியானது. வினாத்தாள் லீக்இதுவரை இல்லாத அளவாக 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.வினாத்தாள் லீக் ஆனது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், ஓ.எம்.ஆர்., எனப்படும் விடைத்தாளில் மோசடி என, பல மோசடிகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரியும், மோசடிகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன.மறுதேர்வு நடத்தக்கூடாது என்றும் வழக்குகள் தொடரப்பட்டன. வெவ்வேறு கோர்ட்களில் நீட் தொடர்பாக தாக்கலான வழக்குகளை, ஒன்றாக விசாரிக்க என்.டி.ஏ., வழக்கு தொடர்ந்தது. எல்லாமாக, 40க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலாகின. தேர்வு மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது.மற்ற வழக்குகளை தள்ளிவைத்து, இந்த மனுக்களை நீதிபதிகள் விசாரித்தனர்.

நீதிபதிகள் உத்தரவு

நீண்ட விசாரணைக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:தேர்வு வினாத்தாள் கசிவு நாடு முழுதும் நடந்ததாக அல்லது திட்டமிட்டு கசிய விட்டதாக உறுதியாக தெரிந்தால் மட்டுமே, நடந்த தேர்வை ரத்து செய்து மறுதேர்வுக்கு உத்தரவிட முடியும். சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்த தகவல்கள் எங்களிடம் தரப்பட்டன. அவற்றை இப்போது வெளியிட்டால், அது விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மோசடி செய்தவர்கள் தப்பிக்க வழிவகுத்துவிடும்.முதல்கட்ட தகவல்களின்படி, ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மற்றும் பீஹாரின் பாட்னாவில் வினாத்தாள் கசிந்துள்ளதாக தெரிகிறது. குஜராத்தின் கோத்ராவில் ஓ.எம்.ஆர்., ஷீட் எனப்படும் விடைத்தாளில் மோசடி நடந்துள்ளது.ஆனால், இரண்டு சம்பவங்களுக்கும் நேரடி தொடர்பு இல்லை. டெலிகிராம் சமூக வலைதளத்தின் வழியாக வினாத்தாள் கசிய விட்டுள்ளனர். அவர்களுடைய நோக்கம், குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது தான். அதனால், எல்லாருக்கும் கிடைக்கும் வகையில் பொதுவாக வெளியிட்டிருக்க மாட்டார்கள். மேலும், நாடு முழுதும் வினாத்தாள் கசிய விடுவதற்கு, பெரிய அளவில் தொடர்புகள் தேவை. அதனால், இது ஒரு சிலரின் குறுகிய நோக்கமே தவிர, தேர்வின் மதிப்பை குறைப்பதோ, தேர்வின் நம்பகத்தன்மையை குலைக்கும் முயற்சியாகவோ தெரியவில்லை. தேர்வு முடிவு ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, மாணவர்கள் ஒவ்வொருவரும் தன் மதிப்பெண் என்ன என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மற்றவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றனர்? எந்த தேர்வு மையங்களில் அல்லது நகரங்களில் அதிகமானோர் அதிக மதிப்பெண் பெற்றனர் என்பது தெரியாது.இதனால், மதிப்பெண் பட்டியல் அடங்கிய முழு ரிசல்டை, நாளை மதியம் 12:00 மணிக்குள் என்.டி.ஏ., தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும். தேர்வு மையம் வாரியாக, நகரம் வாரியாக பட்டியல் வெளியிட வேண்டும். மாணவர்களின் விபரம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் வாயிலாக, எந்தெந்த தேர்வு மையங்கள் அல்லது நகரங்களில் மோசடி நடந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை, 22ம் தேதி நடக்கும் என அறிவித்தனர்.

4 எய்ம்ஸ் மாணவர்கள் கைது

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் தேசிய தேர்வு முகமை அலுவலகத்தில் உள்ள பெட்டியில் இருந்து, நீட் வினாத்தாளை திருடியதாக பங்கஜ் குமார் என்பவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் பீஹார் மாநிலம் பாட்னாவில் இரு நாட்களுக்கு முன் கைது செய்தனர். அவருக்கு உதவியதாக ராஜு சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன் தொடர்ச்சியாக, பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் நான்கு பேரை நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் தங்கியிருந்த விடுதி அறைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஆரூர் ரங்
ஜூலை 19, 2024 19:11

நீட்டுன்னு ஒண்ணு நடக்கவேயில்லை. 2021 இலேயே விடியல் ஐயா முதல் கையெழுத்து போட்டு ஒழிச்சிட்டாங்களே.


R.PERUMALRAJA
ஜூலை 19, 2024 10:05

நீட் தேர்வு முடிவு வெளியானதும் எப்படியும் தமிழகம் கொந்தளிக்கும், தமிழக எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் செய்ய அறிய வாய்ப்பு, மாணவர்கள் மத்தியில் கட்சியை வளர்க்க அறிய வாய்ப்பு, நீட் தேர்வை கொண்டு வந்தவர்களே ஏதோ அமெரிக்காவில் உள்ள JOEBIDEN கொண்டு வந்தது போல தமிழக மக்களிடம் எடுத்துரைத்து 2019 தேர்தலில் வெற்றி பெற்று 2024 தேர்தலிலும் வெற்றிபெற்றுவிட்டனர். அரசியல் செய்ய தெரிந்தவரிடம் மனிதாபிமானம் இல்லை, அரசியல் செய்ய தெரியாதவரிடம் மனிதாபிமானம் இருந்தும் மக்களிடம் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முடியவில்லை.


MANIMARAN R
ஜூலை 19, 2024 09:48

நீட் தேர்வில் இவ்வளவு முறை கேடுகள் நடந்த பிறகும் உச்ச கோர்ட் இந்த தேர்வை நிறுத்த முடியவில்லை என்றல் என்ன செய்ய முடியும் . திமுக நீட் தேர்வே வேண்டாம் என்று கூறியது இப்போது ஊழல் மிக அதிகமாக நடை பெற்றுள்ளது . இந்த முறை கேடுகளை களைய ஆன் லைன் எக்ஸாம் ஒன்ரே வழி


Nagercoil Suresh
ஜூலை 19, 2024 08:45

கப்பல்ல பொண்ணு வந்தால் அப்பாவுக்கும் ஒண்னு இருக்கட்டும்னு கிராமங்களில் சிரிப்புக்கு கூறுவதுண்டு அதே போல மருத்துவ படிப்பிற்கு வினாத்தாள் கிடைத்தால் யாருக்கு தான் வேண்டாம். வினாத்தாளை பரப்பியவர்களை கண்டுபிடித்து என்ன செய்யப்போகிறார்கள் எண்ணெய் லாரி லீக் ஆனால் பொதுமக்கள் பிடிக்கத்தான் செய்வார்கள், சரிபார்த்து வைத்திருக்க வேண்டியவர் லாரியின் உரிமையாளர் எண்ணெய்க்காக பொதுமக்களை திட்டி என்ன பயன்...அரசியல் தலையீடு இல்லாமல் தவறு நடந்திருக்கு வாய்ப்பில்லை என அடித்து கூறலாம்....


ஆரூர் ரங்
ஜூலை 19, 2024 10:09

ஆக பொது மக்களே திருட்டுத்தனமாக பிழைப்பது நியாயம் என நினைக்கிறார்கள் என்கிறீர்களா? அப்போ மீண்டும் தேர்வு நடத்தினாலும் அதேதான் நடக்கும். மாநிலத் தேர்வுகளில் இன்னும் அதிக மோசடி நடக்கிறது. அப்போ குலுக்கல் முறையில் சீட் தந்து விடலாமா?.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 19, 2024 13:03

ஆரூராரே... கடைசியில பொதுமக்களைப் பற்றி தவறா பேசிட்டீங்க... அந்த பொதுமக்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறந்துவிட்டீரே.. மிஸ்டர். அப்ப, “அவனா... நீ...”...ன்னு வடிவேல் வசனத்தில் சொல்லணும்னா... நீங்களும் அந்த பொதுமக்களில் ஒருவர் அல்லவா, நீங்களும் அதைத்தான் செய்ய விரும்புகிறீர்களா... இல்ல... செய்கிறீர்களா...? “ஏண்டி சரியா ஆடலை...?”...ன்னு கேள்வி கேட்டா, “ஆடுன கூடம் கோணலா இருந்ததுதான் காரணம்”... சொன்னாளம், ஆடத் தெரியாதவ...? மருத்துவக் கல்விக்கான சேர்க்கை அமைதியா, பிரச்சினை இல்லாமல் நடந்து கொண்டிருந்தது... என்னைக்கு உங்கள மாதிரி ஆளுங்க... நுழைஞ்சாங்களோ... அன்னைக்கே “ஆமை புகுந்த வீடு” ஆகிவிட்டது...?


MANIMARAN R
ஜூலை 19, 2024 13:44

செம பதில் கடுமையான தாக்கு ஆரூர் ராங் க்கு


Kasimani Baskaran
ஜூலை 19, 2024 05:52

அடுத்த தேர்தலில் தீம்காவுக்கு 40/40 என்று வந்தவுடன் நீட் நீக்கப்படும். அதன் பின் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவில் நீக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.


Aravindan
ஜூலை 19, 2024 06:50

Useless comment, The govt has the responsibility for question leaks.. and responsibility to prevent the issues.


G Mahalingam
ஜூலை 19, 2024 09:39

அரசு அதிகாரிகளை நம்பிதான் ஆட்சி நடைபெறுகிறது. What is the meaning of government. Elected government faithing government officials for conducting exams whatever government in power. If government officials wrong doing, blame the government officials.


R.PERUMALRAJA
ஜூலை 19, 2024 01:02

" முதல் கையெழுத்து நீட்டுக்கு " என்று கூறி ஆட்சியை பிடித்தோர் , நாளை இல் இருந்து வரப்போகும் பிரச்சனைகளை சமாளிக்க இன்றே plan போட்டு வைத்திருப்பர் . அழுவதுபோல பாவலா காட்ட கையில் glycerine செல்லும் இடமெல்லாம் கொண்டு செல்வர் .


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை