உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறுதி சடங்கில் உயிர்பெற்ற இளைஞர்: அலட்சிய டாக்டர்கள் சஸ்பெண்ட்

இறுதி சடங்கில் உயிர்பெற்ற இளைஞர்: அலட்சிய டாக்டர்கள் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஜஸ்தான்: ராஜஸ்தானில், டாக்டர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட இளைஞர், இறுதி சடங்கின் போது திடீரென எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோகிதாஷ் குமார், 25. காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், ஆதரவற்ற நிலையில் காப்பகத்தில் வசித்து வந்தார்.

சுயநினைவு

ரோகிதாஷுக்கு ஏற்கனவே பல்வேறு உடல்நல பிரச்னைகள் இருந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமடைந்தது.ஜுன்ஜுனு நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், மதியம் 2:00 மணிக்கு ரோகிதாஷ் குமார் உயிரிழந்ததாக அறிவித்தனர். அவரது உடல் மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு மாற்றப்பட்டது.போலீஸ் நடைமுறைகள் முடிந்து இரண்டு மணிநேரம் கழித்து, காப்பக பொறுப்பாளர்களிடம் ரோகிதாஷ் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை எரியூட்டும் ஏற்பாடுகளை செய்தனர். அதன்பின், சிதையின் மீது உடலை கிடத்திய போது, ரோகிதாஷ் சுயநினைவு பெற்றதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த காப்பக பொறுப்பாளர்கள், ஆம்புலன்ஸை வரவழைத்து ரோகிதாஷை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.

குற்றச்சாட்டு

ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக ஜெய்ப்பூர் மருத்துவமனை அறிவித்தது. 'உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால், மாற்றுத்திறனாளி இளைஞர் ரோகிதாஷ் உயிர் பிழைத்திருப்பார்' என, காப்பாக பொறுப்பாளர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக ஜுன்ஜுனு அரசு மருத்துவமனையின் மூன்று டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ரோகிதாஷ் உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

MP.K
நவ 23, 2024 15:54

அதனால் தான் இறந்த உடல்களை எரிக்க வேண்டும் என்று வள்ளலார் கூறி உள்ளார்


Ram pollachi
நவ 23, 2024 15:28

உண்மையாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்டோ, கார், பஸ்ஸில் ஏறி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்வார்கள்... கொழுப்பு எடுத்து வண்டியை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்துவது, ஏதாவது ஒரு வழியில் ஒரு தற்கொலை முயற்சி செய்வது இவர்கள் தான் 108 ஐ அழைத்து வாகன ஓட்டிகளை துன்ப கடலில் தத்தளிக்க விடுகிறார்கள். இதில் சர்வ அரசியல் கட்சி, மற்றும் மதவாத அமைப்பு வண்டிகள் என ரோட்டில் அதிவேகமாக செல்வதை பார்க்கும் போது பலருக்கு இதயமே நின்றுவிடும் போல் உள்ளது. தமிழகத்தில் மாவட்டம் தோறும் தினமும் எவ்வளவு நபர்கள் உயிர் இழக்கிறார் என்று கணக்கு எடுத்தால் தலைவலி வந்து விடும்.... வாழ்வும் சாவும் அவன் கையில்....


Ram pollachi
நவ 23, 2024 15:13

நம்ம ஆளாக இருந்தால் மூளை சாவு என சொல்லி இருக்கிற ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் கழட்டி இரண்டு பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது என்று சொல்லி கலெக்டர் அமைச்சர் உடன் முழு அரசு மரியாதை செய்து டாடா பை பை காட்டி இருப்பார்கள். கையை பிடித்து நாடி பார்க்க தெரியாது, நரம்பை பிடித்து ஊசி போட தெரியாது. இந்தியா முழுவதும் ஒரே சிலபெஸ், அனைவரின் நோக்கமும் பணம் சம்பாதிப்பது தான். சில நேரங்களில் டாக்டர்கள் தெய்வமாகவும், பல சமயங்களில் எமன் போலவும் தெரியும்.


Anantharaman Srinivasan
நவ 23, 2024 11:33

This case may be beyond the expectations. டாக்டர்களை குறை சொல்ல முடியாது. மருத்துவ உபகரணங்கள் காட்டும் Report களை வைத்துதான் தீர்மானிக்கிறார்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 23, 2024 10:21

வாய் பேச முடியாத அந்த ஜீவன் தான் இறந்துவிட வில்லை இன்னமும் உயிரோடுதான் இருக்கிறேன் என்று மறுத்துவர்களிடம் ஒரு வார்த்தை கூறாததுதான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என்று இறுதியில் தீர்ப்பு வரும்.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 23, 2024 10:17

உங்கள் கற்பனை தவறு. இது போல நிகழ்வு அல்லது சற்றே மாறுதலான நிகழ்வு தமிழ் நாட்டிலும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் செய்திகள் வெளி வராதபடி ஊடகங்களுக்கு வாய்பூட்டு போடபப்டுகிறது. சமீபத்தில் திருவண்ணாமல் அருகே ஒரு புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கூரை இடிந்து விழுந்த செய்தி வெளியானது. அதற்கு சில வாசகர்களும் கருத்து எழுதி இருந்தார்கள். ஆனால் செய்தி வெளியான சுமார் ஒரு மணி நேரத்தில் அந்த செய்தி அகற்றப்பட்டு விட்டது


J.Isaac
நவ 23, 2024 10:10

எல்லாம் நீட் .,


வைகுண்டேஸ்வரன்
நவ 23, 2024 08:18

இது தமிழ் நாட்டில் நடந்திருந்தால் : அன்புமணி : திமுக ஆட்சி செய்ய தகுதி இல்லை இ பி எஸ் : மாற்றுத் திறநாளிக்கு பாதுகாப்பு இல்லை பாஜக : திராவிட மாடல், ஒன்கொள், கோவால் புற..something அல்லது இத்தாலி, ராவுல் வின்சி நாதக : என் இனதம்பிக்கு சரியான சிகிச்சை இல்லை. அரசு அண்ணன் ஆட்சிக்கு வந்து எல்லா டாக்டரையும் பச்சை மட்டையில் அடிச்சிருவேன். எச் ராஜா : வீதிக்கு வந்து போராடுங்க. நான் வீட்டுக்கு போய் தூங்கணும் ஒரு நல்ல டைம் பாஸ் missed


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 23, 2024 10:19

தமிழ் நாட்டில் அதிமுக ஆட்சியில் இருக்கும்போது இது போன்ற ஒரு நிகழ்வு நடந்திருந்தால் வைகுண்டேஸ்வரன் இது விதி வழி என்றோ அல்லது மருத்துவர்களின் கூடுதலான வேலைப்பளு என்றோ என்றுதான் கருத்து எழுதி இருந்திருப்பார்


SUBRAMANIAN P
நவ 23, 2024 13:14

எலி வலிய வந்து வலையில மாட்டுது..


வைகுண்டேஸ்வரன்
நவ 23, 2024 08:10

கருத்து எழுதலாம். வேணாம்.


Kasimani Baskaran
நவ 23, 2024 08:08

உயிர் இருக்கிறதா இல்லையா என்பதைக்கூட ஒரு மருத்துவராக கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அந்தத்தொழிலுக்கே அவமானம். ஆனால் இது போல பல விநோதங்கள் நடந்துள்ளது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை