மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி
04-Jan-2025
பெங்களூரு: பெங்களூரின் ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில், நாளை இரவு நவீன சாதனங்கள் வழியாக, ஆகாயத்தின் நிகழ்வுகளை பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.இதுகுறித்து, கர்நாடக செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கை:பெங்களூரின் ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் ஆகாயத்தின் நிகழ்வுகளை பார்க்க, வாய்ப்பு அளிக்கப்படுகிறது. டெலஸ்கோப், பைனாகுலர் வாயிலாக பல ஆச்சர்யமான விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள், தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.நாளை இரவு 10:00 மணி முதல், அதிகாலை 4:30 மணி வரை ஆகாயங்களின் நிகழ்வுகளை காண, ஒருவருக்கு தலா 750 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 13 மற்றும் அதற்கு அதிக வயது உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் விபரங்களை, taralaya.org என்ற வலைதளத்துக்கு தெரிவித்து, பெயரை பதிவு செய்து கொள்ளலாம். ஒரே குடும்பத்தினராக இருந்தாலும், ஒவ்வொருவரின் தகவலும் இருக்க வேண்டும். கூடுதல் தகவல் வேண்டுவோர், 080 - 2237 9725, 2225 6084 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
04-Jan-2025