உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேருவின் கடிதங்கள்; சிக்கலில் சோனியா

நேருவின் கடிதங்கள்; சிக்கலில் சோனியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் நேரு நினைவு நுாலகம், பார்லிமென்ட் அருகே, 'தீன் மூர்த்தி' பவனில் இருந்தது. இது, மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ், ஒரு சுயாட்சி நிறுவனமாக செயல்பட்டு வந்தது. பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின், அந்த நுாலகம் பிரதமர்களின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, கலாசார அமைச்சக பொறுப்பில் உள்ளது.இந்த அருங்காட்சியகத்தில், அனைத்து பிரதமர்களின் வரலாறு, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், எழுதிய கடிதங்கள் என பல ஆவணங்கள் உள்ளன. சமீபத்தில், இந்த அருங்காட்சியகம் நிர்வகிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடந்தது.அருங்காட்சியகத்தில், முன்னாள் பிரதமர்களான இந்திரா, ராஜிவ், நரசிம்ம ராவ், தேவ கவுடா, மற்றும் ஐ.கே.குஜ்ரால் உட்பட, பல பிரதமர்கள் எழுதிய கடிதங்கள் உள்ளன; ஆனால், நேருவின் கடிதங்கள் இல்லை. எனவே, அவற்றைக் கொண்டுவர வேண்டும் என, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாம். 'இந்த கடிதங்கள் அனைத்தையும், புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும்' எனவும் முடிவெடுக்கப்பட்டதாம்.கடிதம் எழுதுவதை தன் முக்கிய பழக்கமாக கொண்ட நேரு, கிட்டத்தட்ட 4,000 கடிதங்களை எழுதி உள்ளாராம். மவுன்ட் பேட்டன், அவரது மனைவி உட்பட பல தலைவர்களுக்கு, நேரு எழுதிய கடிதங்கள் அனைத்தையும், சோனியா, பல பெட்டிகளில் எடுத்துச் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இது, காங்., ஆட்சியில் தான் நடந்தது.பா.ஜ., ஆட்சிக்கு வந்த 2014லிருந்து, இதுவரை எட்டு கடிதங்கள் சோனியாவிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாம். 'நேருவின் கடிதங்கள் அனைத்தையும், பிரதமர் அருங்காட்சியகத்திற்கு ஒப்படையுங்கள்' என, கடிதங்கள் எழுதியும், இதுவரை எந்த பதிலும் இல்லையாம். எனவே, 'இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்' என, சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Chandhra Mouleeswaran MK
ஜூன் 30, 2025 20:51

என்னங்கண்ணா இப்பப் போய் இதை எல்லாம் கொடைஞ்சுக்கிட்டு இருக்கீங்களே நேரு மாம்ம்மாவோட கைத்தடின்னு சொல்லி அவருக்கு எப்பவோ யாரோ என்னாத்துக்கோ குடுத்த செங்கோலையே நாங்க தூக்கிப் போடடவங்க தெரியும்லே? அப்ரமேட்டிக்கி, நீங்கெல்லாம் நானு இந்திரா மருமவ அப்டீங்கறதையே மறந்துரியலே


Sridhar
ஜூன் 29, 2025 15:00

குறைந்தது அந்த 8 கடிதங்களை கொடுக்கும்போது ஒரு காபி எடுத்திருந்திருக்கலாம். நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரத்தில் தூங்கிவிட்டு திடீரென முழித்துக்கொண்டால், ஒத்துழைப்பு கொடுக்கவேண்டிய அவசியம் திருடனுக்கு எங்கே இருக்கிறது? எல்லா கடிதங்களையும் கொடுத்துவிட்டு இவ்வளவுநாளா அந்த ஆளுக்கு கட்டமைக்கப்பட்ட பிம்பம் சுக்குநூறா சிதைஞ்சு அதனால் கட்சிக்கு கிடைக்கிற கொஞ்சநஞ்ச சீட்டும் கிடைக்காமல் போவதற்கு அவங்க உறுதுணையா இருக்கணும்னு எப்படி எதிர்பார்க்கலாம்? என்னதான் வெளிநாட்டு மருமகளா இருந்தாலும் இவ்வளவு அக்கறையா குடும்ப பெருமையை பெயரை பாதுகாக்க முயல்கின்ற அந்த நபரை பாராட்டவேண்டும்.


Suppan
ஜூன் 29, 2025 13:16

இந்தக் கடிதங்கள் வெளியிடப்பட்டால் நேருவின் கட்டமைக்கப்பட்ட பிம்பம் உடைந்துவிடும். நேருவின் குடும்பக் கட்சியும் சின்னாபின்னமாகிவிடும். நேருவின் பெயரை வைத்து அடித்து விடப்படும் கருத்துக்களை மக்கள் புறம் தள்ளுவார்கள். .


ஆரூர் ரங்
ஜூன் 29, 2025 13:15

மறைக்க இதெல்லாம் ..?


Ramesh Sargam
ஜூன் 29, 2025 12:53

அது இந்நேரம் பத்திரமாக இத்தாலியில் உள்ள அவர் அம்மா வீட்டிலோ, பாட்டி வீட்டிலோ ஒரு மூலையில் விழுந்து கிடக்கும். மீட்பது கடினம். இந்திய பத்திரிகைகளில் ஒரு வேலை ஒரு சில கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தால் அவற்றை தேடி எடுக்கலாம்.


Yes your honor
ஜூன் 29, 2025 12:01

கண்ணதாசனுக்கே டக்கர் குடுத்திருப்பாரோ?


subramanian
ஜூன் 29, 2025 12:01

முறைகேடாக எடுத்து சென்றதை உடனடியாக திரும்ப தர வேண்டும்


அன்பே சிவம்
ஜூன் 29, 2025 08:51

ஏதாவது லஞ்சம் ஊழல் வழக்கில் சிக்கினால் உடனே இத்தாலி எஸ்கேப் ஆகி விடுவார்கள்.


பேசும் தமிழன்
ஜூன் 29, 2025 08:35

முக்கியமாக ஒரு குறிப்பிட்ட மத மக்கள் செய்த குற்றங்களை கண்டும் காணாமல் இருந்தது....... நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது அணியினரை... வெள்ளையனுக்கு காட்டி கொடுத்து எழுதிய கடிதங்களை இந்த இத்தாலி திருட்டு கும்பல் மற்றும் பப்பு அண்ட் கம்பெனி மறைத்து இருக்கலாம்.


Rajan A
ஜூன் 29, 2025 08:28

அந்த கடிதங்கள் தேவையே இல்லை. கான் கட்சி 50+ ஆண்டு சேவையை இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் கட்டுக்குள் கொண்டு வர முடியாது. இந்தியாவின் சீரழிவுக்கு காரணம் அவர்கள் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை